Showing 65–79 of 79 results

  • SAVE 7%

    மரி என்கிற ஆட்டுக்குட்டி / Mari Enkira Aatukutty

    230 214
    மரியை எனக்குத் தெரியும் . அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள் . வசதியான குடும்பம் . தெருவில் மூன்று கார்கள் நின்றன . நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள் . வீட்டில் , அம்மா இல்லை . அதாவது குழந்தையிடம் இல்லை . அப்பா , பணம் பண்ணிக் கொண்டிருந்தார் . அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள் . அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள் .
    குழந்தைகள் பெற்றோர்களிடம் , ஆசிரியர்களிடம் , உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் . அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான் . அது மட்டும்தான் , அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம் .
    – பிரபஞ்சன்
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    யாசுமின் அக்கா / Yaasumin Akka

    250 233
    துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா ? முடியும் . மகத்தான ஞானிகள் , துறவிகள் குடும்பத்துக்குள் , குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள் .
    அபிமன்யு – உத்தரை இவர்களின் குழந்தை பரிட்சித்து . இறந்து பிறந்தது . கரிக்கட்டையாகப் பிறந்த பரிட்சித்து எப்படிப் பிழைக்க முடியும் ? மனைவி , குடும்பத்தோடு வாழ்ந்தாலும் , மனசில் கொஞ்சம்கூடக் காமம் இல்லாத மனிதன் எவனோ அவன் குழந்தையைத் தொட்டால் குழந்தை பிழைப்பான் என்கிறது விதி .
    ரிஷிகள் தொட்டார்கள் . குழந்தை பிழைக்கவில்லை . முனிவர்கள் , துறவிகள் , ஞானிகள் எல்லோரும் தொட்டார்கள் . குழந்தை அசையவில்லை . தாய் அலறுகிறாள் . கிருஷ்ணன் , ‘ நான் தொடலாமா ‘ என்கிறான் . எல்லோரும் சிரிக்கிறார்கள் . அவன் மனைவிகள் திகைக்கிறார்கள் . கிருஷ்ணன் தொட்டான் . குழந்தை பிழைத்துக்கொண்டது . முன்னுரையிலிருந்து .
    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    வல்லிசை / Vallisai

    300 279
    உலுக்குகிறது பறை இசை , விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது . பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன் . ஒரு கணம்தான் . அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன் . எம் எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன . இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது . பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர் . ஆனால் , அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது ?
    இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம் . சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி . இது அனைவரும் அறிந்தது . ஆனால் , விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை . என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன் . அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பரவச்செய்யும் . நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காய்ந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன் .
    அழகிய பெரியவன்
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    வானம் வசப்படும் / Vaanam Vasappadum

    400 372
    தன் கையை எந்தச் சூழலின் கையில் சாட்டை இருந்தது என்பதையும் , பம்பரம் யாராக இருந்தார்கள் என்பதையும் வரலாறு அக்கறை கொள்கிறது . புறாவுக்குத் சதையை அறுத்துக் கொடுத்த பரம்பரையாக்கும் எங்கள் பரம்பரை என்பதற்கோ , தப்பாகக் கதவைத் தட்டிய தவறுக்காகக் வெட்டி கொண்ட கனவான் எங்கள் பரம்பரை என்று புராணங்களை உருவாக்கிக் கொள்வதற்கோ , நாங்கள் ஆண்ட பரம்பரையாக்கும் என்று பொய்ப் புகழ் சூட்டிக்கொள்வதற்கோ , வரலாற்றைப் பூனைக்குட்டியாக்கிக் காள்ளும் போக்கு , அபாயகரமான போக்கு . சாதி , மத , இனப் புகழ் பரப்பும் பரப்புச் செயலூக்கி அல்ல வரலாறு . ஆள்வோர் , ஸ்தாபனங்கள் , விரும்புபவைகளைக் கருத்தில் காண்டு எழுதப்படுபவையும் அல்ல , வரலாறு . காலம் காலமாக , வெவ்வேறு ரூபங்களில் தொடர்ந்து நடக்கும் விடுதலைப் போராட்ட உணர்வுகளை மேல் எடுத்துச்சொல் வதே வரலாறு .
    முன்னுரையிலிருந்து …..
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    விரல்கள் / Viralgal

    130 121
    பெண் , ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை , முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இந்தக் கதைகள் வழியாக நான் கண்டடைந்தேன் . குறிப்பாக , ‘ விரல்கள் ‘ , மற்றும் ‘ அழகின் ஒரு பகுதி ’ , கதைகள் . பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் இலட்சோப இலட்ச ஆண்டுகளில் இருவரும் ஒருவரையொருவர் எதிரிகளாய்ப் பார்க்கக் கற்றுக்கொண்டதைக் காதல் வழியாகவே வெல்லமுடிந்திருக்கிறது . என்றாலும் , காதலில் புதைந்து கிடக்கும் முட்டாள்தனம் மானுட ரகசியங்களின் பொருள் விளங்கிக் கொள்ளும் தம் முயற்சிகளைக் கைவிட்டது போல் தோன்ற காதலை எப்படியெல்லாம் தன் வாழ்க்கையின் அறைகளுக்குள் நகர்த்திச் செல்லமுடியும் என்பதன் பயணம்தான் இத்தொகுப்பு .
    குட்டி ரேவதி
    Add to cart
  • SAVE 7%