1947 ஆம் வருடத்திய வசந்த காலம் . மௌண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவி எட்வினாவும் புதுதில்லியில் வந்திறங்கினர் . இந்தியாவில் உள்நாட்டுக் கலகம் வெடித்த காலம் . எட்வினா தயக்கம் நிறைந்தவர் . ஆனால் விதிகளை உடைக்கத் தயங்காதவர் . அவருடையது அலைக்கழிப்புக்கு உள்ளான ஆன்மா . பேரழகி , பட்டாசு போன்றவர் . வெளியில் தெரிந்தவை மட்டுமல்ல அவர் . அவருடைய கவர்ச்சி ஒரு முகப்பு மட்டுமே . அதற்குப் பின்னால் இருந்தது செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய அதிபுத்திசாலியான பெண்மணி .
அவருடைய உண்மையான இயல்பைப் புரிந்து கொண்டவர் அவருடைய நண்பர் ஜவஹர் . அவர்கள் இருவர் வாழ்வை மட்டுமல்ல , பல கோடி இந்தியர்களின் வாழ்வையும் புரட்டிப் போட்ட நிகழ்வுகளும் உறவுகளும் யாரும் ஊகித்திருக்க முடியாதவை .
பிரிவினை காலத்தில் நிகழும் ‘ கடைசி வைஸ்ராயின் மனைவி என்னும் இந்நாவல் இரு நாடுகளின் பிறப்பை , காதலை , துயரத்தை , சோகத்தை , இரக்கமின்மையை , நம்பிக்கையின் வெற்றியைப் பேசும் இதயத்தை உருக்கும் கதை .
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் , முதல் வாசிப்பிலேயே நாமும் இந்தப் படைப்பில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறோம் அல்லது இந்தக் கதைகள் முழுக்க நாம்தான் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன . அடிமனதில் உறைந்துவிட்ட பழைய பாடல்கள் போல , நம்மை விடாது தொடர்ந்துகொண்டிருக்கும் இக்கதைகளின் கலைத்தன்மை செய்நேர்த்தியால் வந்ததன்று , உண்மையின் தரிசனத்தால் வந்தது !
இத்தொகுதியில் இந்துமதம் , மெய்யறிவு குறித்து ஜெயமோகன் அவருடைய வாசகர்களுடன் செய்த உரையாடல்கள் கட்டுரை வடிவில் உள்ளன . ‘ நான் இந்துவா ? ‘ எனக் கேட்கும் அடித்தளச் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு மறுமொழி அளித்தபடி தொடங்கும் இந்நூல் நாத்திகத்துக்கும் இந்து மதத்துக்குமான உறவு , பண்பாட்டுக்கும் மதத்துக்குமான தொடர்பு , நம் குழந்தைகளுக்கு மதத்தை அறிமுகம் செய்யத்தான் வேண்டுமா போன்ற பல அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தேடிச்செல்கிறது .
உலகச் செவ்வியல் நாவல்களின் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் பேரிலக்கியம் .
குற்றம் / தண்டனை ஆகிய இருமைகளைக் குறித்து விரிவான சமூகவியல் உளவியல் பின்னணிகளோடு கூடிய தர்க்கபூர்வமான இரு தரப்பு வாதங்களையும் முன் வைத்து கதைக்கட்டுக்கோப்பு சற்றும் குலையாதவண்ணம் இந்நாவலில் மிக விரிவான ஆழமான ஆராய்ச்சி ஒன்றையே நிகழ்த்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி . ஒரு செயல் எப்போது குற்றமாகிறது … அப்படி அது குற்றம் என்று கருதப்படுமானால் அதற்கான தண்டனை வர வேண்டியது எங்கிருந்து என்பது போன்ற சிந்தனைகளின் பாதிப்புகளால் இந்நாவலின் மெய்யான வாசகர்கள் அலைக்கழிக்கப்படுவதே இந்நாவலின் வெற்றி .
ஒரு மனநிலைச் சித்திரிப்பு , உடனேயே அதற்கு நேர் எதிரான மற்றொரு மனநிலைச் சித்திரிப்பு , மிக எளிமையாகத் துவங்கி அப்படியே தத்துவார்த்தத் தளத்திற்கு உயர்ந்துவிடும் உரையாடல்கள் என்று தீவிரமான மொழிநடையோடும் மொழிநடையோடும் செறிவான கதைப்பின்னலோடும் உருவாகியிருக்கும் இந்தப் படைப்பை இதுவரை இருபத்தாறு உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த நாவலை முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்க்க வாய்த்தது நான் செய்த நற்பேறு .