Showing 145–160 of 207 results

  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 7%

    பாரிஜாத் / Paarijaat

    1,150 1,070
    இப்புதினம் ஒருகாலக்கண்ணாடி என்றால் அதுமிகையன்று . காதலர்கள் பார்வையில் இது ஒருகாதல் காவியம் . வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவு . சமயப் பற்றாளர்களின் பார்வையில் இது ஒரு வழிகாட்டும் நூல் . கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி ரூஹியின் மனக்குமுறல்கள் , சோகங்கள் , ஏக்கங்கள் மற்றும் போராட்டங்கள் இவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு , நம்மையும் அவர்களோடு சேர்ந்து அவ்வுணர்ச்சி ஓட்டங்களில் ஒன்றிடச் செய்கிறது .
    இந்துகலாச்சாரம் , விழாக்கள் , இஸ்லாமியப் பண்டிகைகள் என்று எல்லா வற்றையும் மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர் . இப்புதினத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்காங்கே கதையின் ஓட்டத்திற்கேற்றவாறு கவிதைகளையும் , கிராமியப் பாடல்களையும் இணைத்திருக்கும் அழகு , படிப்பவருக்கு ஓர் ஆனந்த அனுபவத்தைக் கொடுக்கும் .
    நாசிரா ஷர்மா : இவர் ஒருபுகழ்பெற்ற எழுத்தாளர் மட்டுமன்றி , பன்முகத் திறமை வாய்ந்தவர் . பன்மொழிப் புலவரும் கூட . ஹிந்தி , பார்ஸி , அரபி , உருதபோன்ற பல மொழிகளும் அறிந்தவர் . இவருடைய சிந்தனைகளும் எண்ணங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களைப் பற்றி எழுதும்போது அதனுள்ளே புகுந்து , காலம் கடந்த உண்மைகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருப்பது வெகுசிறப்பு .
    டி . சாய்சுப்புலட்சுமி : இந்நூலை மொழியாக்கம் செய்தவர் . இதற்கு முன்பு சாகித்திய அகாதெமியின் ” இந்திய இலக்கியச் சிற்பிகள் ” வரிசையில் பீஷ்ம சாஹ்னியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர் . எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ஹிந்தித் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் . இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல வார , மாதநாளிதழ்களில் வெளியாகி , சிலகதைகள் விருதுகளையும் பெற்றிருக்கின்றன .
    Add to cart
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 7%

    பீலர்களின் பாரதம் / Bheelargalin Bharatham

    270 251

    பீலர்களின் பாரதம் ” என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும் . பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர் . இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக , மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்துள்ளது . கதைமாந்தர்கள் மூலம் பீலர்கள் சமூகத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள் , சடங்குகள் மற்றும் சமூக அமைப்பு போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது . எழுத்து வடிவம் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள பூர்வகுடிகள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் . அவர்களுடைய பேச்சு வழக்கில் தொன்று தொட்டுப் புழக்கத்தில் உள்ள இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களாகவே உள்ளன . அவ்வாய் மொழி இலக்கியங்கள் பாடல்கள் , கதைகள் , காவியங்கள் , மகா காவியங்கள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளன . இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரக் கூறுகளை உணர்வதற்கு , வாய்மொழி இலக்கியங்களையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது . இதனைக் கருத்தில் கொண்டு சாகித்திய அகாதெமி , இந்தியாவில் உள்ள பழங்குடியினர்களின் வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்தும் , மொழிபெயர்த்தும் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது .

    Add to cart
  • SAVE 8%
  • SAVE 7%

    புதிய தமிழ் இலக்கிய வரலாறு 1,2,3 / Puthiya Tamizh Ilakkiya Varalaaru 1,2,3

    1,780 1,655
    மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு , இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது . பண்டைக் காலம் , இடைக்காலம் , இக்காலம் என்று மூன்று காலங்களுக்கும் தனித் தனித் தொகுதிகள் கொண்டது .
    இந்நூலில் அவ்வக்கால மொழியின் வளர்ச்சி , சமூக அரசியல் பின்புலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது . ஒவ்வொரு தனித் தனிக் கட்டுரையும் வெவ்வேறு அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு .
    மலேசியா , ஈழம் ஆகிய நாடுகளின் இலக்கிய வரலாறும் இத்தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது . அறிஞர் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயன் நல்கும் தகவல் களஞ்சியம் புதிய தமிழ் இலக்கிய வரலாறு .
    தொகுப்பாசிரியர்களாகவும் , முதன்மைப் பதிப்பாசிரியர்களாகவும் விளங்குபவர்கள் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் , எழுத்தாளரும் அறிஞருமான நீல பத்மநாபன் இருவரும் ஆவர் .
    நீல பத்மநாபன் சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் ( 1998-2002 ) இத்தொகுதிகள் திட்டமிடப்பட்டன . சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளராக விளங்கிய காலத்தில் ( 2008-2012 ) இப்பணி நிறைவு பெற்றது .
    நாவல் , சிறுகதைப் படைப்பாளியான நீல பத்மநாபன் , சாகித்திய அகாதெமி விருதும் மொழிபெயர்ப்புப் பரிசும் பெற்றவர் . கவிஞரான சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதை , மொழிபெயர்ப்பு ஆகிய இரு துறைகளில் சாகித்திய அகாதெமி விருதுகள் பெற்றவர் .
    Read more
  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 7%

    புரட்சிக்காலம் / Puratchikaalam

    110 102
    1934 ம் ஆண்டில் பிறந்த பிரஃபுல்லராய் “ ஜீகாந்தர் ” வங்காளிப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார் . பின்னர் “ சம்வாத் பிரதின் ” பத்திரிகையிலும் பணிபுரிந்தார் . இவர் நாடுமுழுவதும் பெரும்பாலும் கால் நடையாகவே . சுற்றி மக்களின் வாழ்கையைக் கூர்ந்து கவனித்திருக்கிறார் . 100 க்கு மேற்பட்ட நாவல்கள் . சுமார் 150 சிறுகதைகள் , 10 சிறுவர் கதை , கட்டுரைத் தொகுப்புகள் இயற்றியுள்ளார் . இவருடைய படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன . திரைப்படமாகவும் ஆக்கப்பட்டுள்ளன ; பல விருதுகள் பெற்றுள்ளன .
    நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரிவினைவாத இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு போராளி போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு , அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஒரு முன்னாள் சம்ஸ்தான மன்னனின் அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டு அதில் உள்ளவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு தங்கியிருக்கிறான் . அந்தவீட்டு மருமகள் அவனை எப்படி சமாளிக்கிறாள் என்பதைச் சுவையாக சொல்லும் இந்த நாவலில் முக்கிய பாத்திரங்களின் உணர்ச்சிகளின் சித்தரிப்போடு நாட்டின் அரசியல் நிலைமையும் விவாதிக்கப்படுகிறது .
    மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ( 1929 ) சில ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியபின் இந்திய அரசின் தணிக்கைத் துறையில் சேர்ந்தார் . உதவி இயக்குநராகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் அரை நூற்றாண்டு காலமாக தமிழ் , ஆங்கிலம் , வங்காளி மொழிகளில் எழுதியும் , மொழிபெயர்த்தும் வருகிறார் . காஜி நாஸ்ருல் இஸ்லாம் . சரத்சந்திரர் , பிரேம்சந்த் , ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதியுள்ளார் . சிலப்பதிகாரம் – ஆங்கில மொழிபெயர்ப்பு , திருக்குறள் – வங்க மொழிபெயர்ப்பு ஆகியவை இவரது படைப்புகளில் முக்கியமானவை . சாகித்திய அகாதெமி விருது ( 1977 ) பெற்ற இந்திரா பார்த்தசரதியின் ” குருதிப்புனல் ” நாவலை தமிழிலிருந்து வங்க மொழியில் “ ரக்தபன்யா ” என்று மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது 1991 – ல் இவருக்கு வழங்கப்பட்டது .
    Add to cart