Showing 33–48 of 207 results

  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 7%

    கருங்குன்றம் / Karunkundram

    290 270
    லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர் . மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங்காலமாக இருந்துவரும் உரிமைகளையும் , சுதந்திர வாழ்வையும் ஒருசேரப் பறித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் நடுவிலும் , பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சிலர் துணைபோவதால் இனக் குழுக்களிடையே மூளும் மோதல்களுடன் ஆழ்ந்த காதலும் முகிழ்க்கிறது .
    வடகிழக்கு மண்ணின் இயற்கை எழிலையும் பூர்வகுடிகளின் வாழ்க்கைமுறை , சடங்குகள் , நம்பிக்கைகள் போன்றவற்றையும் அழியாத சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறது இந்நூல் . விரிந்து நீண்ட களப்பணிகளில் திரட்டிய தரவுகளின் மூலம் மறைந்துபோன மெய்யான வரலாற்றைக் கற்பனை போலக் கட்டமைத்துள்ள இந்தப் புதினம் , 2017 ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது .
    Read more
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 7%

    காக்கைகளும் ஆயுள் தண்டனையும் / Kaakaikalaum Aayul Dandanaiyum

    175 163
    காக்கைகளும் ஆயுள் தண்டனையும் :
    ‘ கவ்வே ஔர் காலாபானி ‘ என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பே இந்நூல் . 1985 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்த கதைத் தொகுப்பில் ஆசிரியரின் ஏழு கதைகள் இடம் பெற்றுள்ளன . மனித உறவுகளில் இன்று ஏற்பட்டுள்ள தேக்கம் . சிதைவு , வேதனை , இயலாமை எல்லாம் இந்தக் கதைகள் வாயிலாக நம் மனதை உலுக்கிவிடுகின்றன .
    நிர்மல் வெர்மா :
    20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர் . ஹிந்தி கதாசிரியர் , மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் . ‘ நயீ கஹானி ‘ இயக்கத்தைத் துவங்கியவர் . தனது ஐம்பது ஆண்டு கால இலக்கியப்பணியில் இவர் ஐந்து நாவல்கள் , எட்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் பயணக் கட்டுரைகள் , விமர்சனம் என 25 க்கும் மேற்ப்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் .
    சுவாதி எச் . பத்மநாபன் :
    மூத்த மொழி பெயர்ப்பாளர் மற்றும் சிந்தனையாளர் . நீல பத்மநாபன் மற்றும் சின்ன பாரதியின் சில படைப்புகளை மொழிபெயர்த்தவர் . நல்லி திசை எட்டும் விருது மற்றும் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் உள்ளூர் விருதையும் பெற்றவர் .
    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 7%

    கிராம கீதா / Graama Geetha

    335 312
    சந்த் துகடோஜி மகராஜ் 1909 – 1968 : மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா ( அன்றைய மத்தியப்பிரதேசம் ) பகுதியில் யாவளி என்ற ஊரில் பிறந்தார் மாணிக்தேவ் . முறையான கல்வி பயிலாத மாணிக் சாதுக்களோடு சுற்றி அலைந்து மக்களிடம் கல்வி , விவசாயம் , சுகாதாரம் , பக்தி போன்ற விஷயங்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றி துகடோஜி மகராஜ் என்று புகழ்பெற்றார் . பல நூல்களைக் காவியமாக இயற்றினார் . அவர் இயற்றிய நூல்கள் பெரிய பண்டிதர்களால் , தேசத்தலைவர்களால் பாராட்டபெற்றவை . இவை குடத்துக்குள் கடல் போல் அறிவுக்களஞ்சியங்கள் என அறியப்படுகின்றன .
    கிராம கீதா : கிராமங்களின் அவல நிலை , கல்வியின்மை , ஏழ்மை மற்றும் பின் தங்கிய சமுதாயம் – இவை அனைத்தும் கண்ட துகடோஜி , நிலைமையை மாற்ற வழியை இக்காவியத்தின் மூலம் கூறுகிறார் . விவசாயத்தில் துவங்கி , கல்வி , கூட்டுறவுச் சங்கம் , கிராமப் பஞ்சாயத்து , பள்ளிக்கூடங்கள் , மகளிர் முன்னேற்றம் , சுத்தம் , சுகாதாரம் என்று மனித வாழ்க்கை முன்னேறத் தேவையானவற்றை இதில் காணலாம் .
    விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் : தமிழ் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் சிறுகதை மற்றும் நாவல்கள் படைத்து , பரிசுகளும் பெற்றுள்ள விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் , அகில இந்திய வானொலியில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . ” ஆலமரம் ” என்கிற புதினம் இவரின் சிறந்த படைப்பு , பல பரிசுகள் பெற்றுள்ளது .
    Read more