சீனாவுக்கான வணிகப் பாதையில் இருப்பதால் எப்பொழுதுமே வணிக முக்கியத்துவத்துடன் இருக்கும் தென் கிழக்காசிய நாடு இந்தோனேசியா . பதினோறாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் மேலாதிக்கம் செய்த மண்ணிலேயே , 18 – ஆம் நூற்றாண்டில் கூலிகளாகத் தமிழர்கள் வாழ நேர்ந்த அவலம் நிகழ்ந்த தேசம் .
சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையணத் தேவர் நாடு கடத்தப்பட்டு , சிறை வைக்கப்பட்டிருந்த நாடு . கலையெழில் நிரம்பிய இந்து , பௌத்தக் கோயில்கள் நிரம்பிய தீவு . ஒரே நேரத்தில் பெருமிதமும் துயரமும் பெருகச் செய்யும் பதினாறாயிரம் தீவுகள் கொண்ட தேசமான இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல் , ‘ யானைகளின் கடைசி தேசம் . ‘ இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர் மு.ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள் , வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால் , பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன .
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக , நாட்குறிப்புகளாக , கடிதங்களாக , அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள் . அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன . அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன் .
ஆங்கிலேயர்களின் வாழ்வை , அவர்கள் சந்தித்த சிக்கல்களைத் தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவு இந்த நூல் .
ஆங்கிலேயர்களைப் பற்றி தமது பாடப் புத்தகங்களில் , பொதுப் பத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கூடும் .