Showing 65–80 of 1276 results
-
Add to cart
Thillaiyil Oru Kollaikaran/தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
₹300₹27914ஆம் நூற்றாண்டில் நடந்த முகமதியப் படையெடுப்பை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது? சமணமும் பௌத்தமும் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில், இந்து மதம் தனது விக்கிரகங்களை எவ்வாறு எதிரிகளின் கரங்களிலிருந்து காப்பாற்றியது? அரங்கம் முதல் தில்லைவரை, மதுரைமுதல் சீர்காழிவரை ஒவ்வொரு விக்கிரகத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. இது தில்லையின் கதை. காணாமல் போன நடேசன் அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு வந்ததன் பின்னாலுள்ள ஓர் அசாதாரணக் கதை. அனுஷா வெங்கடேஷின் இந்த அபாரமான சரித்திர நாவல் தமிழ் வாசகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி.
-
Read more
Thozhargal /தோழர்கள்
₹170₹158‘இந்நூல் இன்றைய இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும்.’ – ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
கம்யூனிசம் என்றால் என்ன? நம் உலகையும் நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் அது எவ்வாறு அணுகுகிறது? கம்யூனிஸ்டுகள் யார்? பிற கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு மாறுபடுகின்றனர்? தங்கள் வாழ்க்கைமுறையையும் நெறியையும் அவர்கள் எவ்வாறு வகுத்துக்கொள்கின்றனர்? உழைக்கும் மக்களின் வாழ்வில் அவர்கள் செலுத்திய, செலுத்திவரும் தாக்கம் எத்தகையது? இந்தக் கேள்விகள் முன்பைவிடவும் இன்று தீவிரமும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதாகும். கோட்பாடுகளின்மூலம் விளக்குவது ஒரு வகை என்றால் அக்கோட்பாட்டை ஏற்று நடைமுறையில் பின்பற்றிவரும் தோழர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கம்யூனிசத்தை விளக்குவது இன்னொரு வகை. இந்நூல் இதைத்தான் செய்கிறது.
சிங்காரவேலர், ஜீவா, ஈ.எம்.எஸ்., பி. சீனிவாச ராவ், அமீர் ஹைதர் கான், சங்கரய்யா, சுர்ஜித், பி. ராமமூர்த்தி போன்ற தோழர்களின் போராட்ட வாழ்வையும் சமூக, அரசியல் பங்களிப்புகளையும் எளிமையாகவும் செறிவாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் கி. ரமேஷ். வாழ்க்கைக் குறிப்புகளோடு அவரவர் காலத்து அரசியல், சமூகப் பின்னணியையும் இணைத்து வழங்குவது இந்நூலின் சிறப்பு.
-
Add to cart
Vaaranavatham Duryothana Parvam/வாரணாவதம் – துரியோதன பர்வம்
₹275₹256வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். மகாபாரதத்தை யாருடைய பார்வையிலிருந்தும் விரித்தெடுக்கலாம். நன்மை தீமை, தர்மம் அதர்மம், நாயகன் வில்லன் ஆகிய இருமைகளைக் கொண்டு மகாபாரதத்தை அணுகுவது ஒரு முறை என்றால் இந்த மதிப்பீடுகளிலிருந்து விலகி, எதிர் நிலையிலிருந்து அதன் கதையைச் சொல்லத் தொடங்குவது இன்னொரு முறை. இந்நாவலில் மகாபாரதம் துரியோதனின் கோணத்திலிருந்து விரிகிறது. கறுப்பும் வெள்ளையும் கலந்து வியாசர் உருவாக்கிய துரியோதனனை இருள் மனிதனாக மட்டும் சுருக்கிக் காணவேண்டியதில்லை என்று வாதிடும் இந்நாவல் ஒரு புதிய தேடலைத் தொடங்கி வைப்பதோடு நமக்கு நன்கு பரிச்சயமான கோணங்களையும் நிகழ்வுகளையும் புதிய நோக்கில் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. முற்றிலும் புதிய, வண்ணமயமான ஒரு மகாபாரதத்தை வாசிக்கத் தயாராகுங்கள்.
-
Add to cart
Vada Chennai/வட சென்னை
₹300₹279வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவ-தோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதன்மூலம் ஒரு புதிய வரலாற்றையும் இந்நூல் படைக்கிறது. மேல்கட்டுமானம் அல்ல, அடித்தளமே வரலாற்றை நிர்ணயிக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கிறார் நிவேதிதா லூயிஸ்.
இது ஒரு பயணத்தின் கதை. ஒரு நிலப்பரப்பின் கதை. நம் மண்ணின், நம் மனிதர்களின், நம் மரபுகளின் கதை.
-
Add to cart
Vijayanagara Perarasu /விஜயநகர பேரரசு
₹250₹233தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.
-
Add to cart
Yaar Nee/யார் நீ? (இரண்டாம் பதிப்பு
₹275₹256யார் நீ? (இரண்டாம் பதிப்பு) நம் ஆளுமைத் திறன் எப்படிப்பட்டது, நாம் உள்ளுக்குள் என்னவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதலை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருப்பது அவசியம். நாம் யார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் விரும்பும் மாற்றம் நமக்குள் நிகழும். ஒருவருடைய பர்சனாலிட்டியைத் தெரிந்துகொள்ள MBTI, TA, 16 PF, எனியகிராம் உள்ளிட்ட செயல்முறைகளை உலகளவில் வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கையாள்கிறார்கள். இவை அறிவியல்பூர்வமானவை. நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள பெரிதும் உதவுபவை. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படிப்படியாகப் பின்பற்றினால் நம் ஒவ்வொருவரின் பர்சனாலிட்டி டைப் என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம். இது தன்னையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. கண்டுபிடித்து முடித்த பிறகு, நாம் என்ன மாதிரியான மாற்றங்களையும் திருத்தங்களையும் நம் குணாதிசயங்களில் கொண்டுவர விரும்புகிறோமோ அவற்றை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். விரிவான வாசிப்பையும் நீண்ட ஆய்வையும் இணைத்து இந்த விலை மதிப்பற்ற உளவியல் கையேட்டை உருவாக்கியிருக்கிறார் சோம. வள்ளியப்பன். இது ஒரு புது வரவு மட்டுமல்ல, புரட்சிகரமான வரவும்கூட.
-
Read more
அகம் புறம் / Agam Puram
₹225₹209கஷ்டப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள் ‘ என்கிற விவிலிய அடையாளத்தை வாழ்க்கை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது . ஒரு சுமை தாங்கியின் முக்கியத்துவம் , எந்த ஒரு நடுகல்லின் முக்கியத்துவத்துக்கும் குறைந்தது அல்ல . நிழல் மரங்களுக்கு அருகில் நடப்பட்டு இருக்கிற சுமை தாங்கிகளுக்குப் பெரிய வடிவமைப்புகள் எதுவும் அவசியமில்லை . இரண்டு கல்தூண்கள் , மேலே குறுக்கே ஒரு கல்பாலம் . நின்றவாக்கில் உங்கள் தலைச் சுமைகளை இறக்கிக் கொள்ளலாம் .தகிப்பாறிய பின் தோள் மாற்றிய சுமையுடன் மேலும் பயணம் தொடரலாம் . நிறையக் கடிதங்கள் அப்படியே இருந்தன ; மிக எளிமையாக , நேரடியாக , ஆரம்ப காலக் கடிதங்கள் எல்லாம் ஒரு சிட்டுக் குருவிச் சிறகினை அல்லது கோழித் தூவலை ஊதி ஊதி , நாலைந்து பேராக அதைக் காற்றிலேயே தக்கவைத்து , தரையிறங்கி விடாமல் மேலே மேலே தள்ளுகிற விளையாட்டு போல இருந்தன . இப்போதைய கடிதங்கள் வாழ்வின் துயரம் நிறைந்த பகுதிகளை , அன்றாடத்தில் பக்கத்து மனிதர்கள் செவிகொடுக்கத் தயங்கி அப்புறம் நகர்வதை , மிக நேரடியான சொற்களில் பகிர்ந்துகொள்பவை . மிகவும் நெருங்கிய உறவினரின் பூதவுடல் வீட்டுக் கூடத்திலிருந்து தெருவுக்கு நகரும்போது உண்டாகிற அழுகை போல , வெடித்துப் பீறிடுகிற , நாகரிகம் பார்க்காத உணர்வுடன் கூடியவை .. – வண்ணதாசன் -
Read more
அகம்,புறம்,அந்தப்புரம் / Agam,Puram,Anthappuram
₹1,666₹1,549இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது .மாட மாளிகை , கூட கோபுரம் , பளிங்குப் பிரதேசங்கள் , பரவச நந்தவனங்கள் , இந்தப் புறம் அந்தப்புரம் , எந்தப் புறமும் எழில் கன்னிகைகள் , சுகம் – சொகுசு உல்லாசம் நூறு சதவிகிதம் , எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம் . பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘ முந்தைய அத்தியாயம் ‘ ஒரு புதைபொருள் . அதுவே இந்தப் புத்தகம் .தன் ‘ வளர்ப்பு ‘ நாய்க்கு கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்த மகாராஜா முதல் மன்னர் மானியத்தையும் இழந்து மாதச்சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற ராஜா வரை – இந்தப் புத்தகம் விவரிக்கும் சரித்திரம் நீண்டது . நெடியது . ஹைதராபாத் , பரோடா . மைசூர் , ஜெய்ப்பூர் , காஷ்மீர் , புதுக்கோட்டை , பாட்டியாலா , நபா , கபுர்தலா , இந்தூர் , ஜோத்பூர் , தோல்பூர் , பரத்பூர் , அல்வார் , பஹவல்பூர் , ஜூனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளன .மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது . அதனால்தான் , யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல் , வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது .முகிலின் இந்தப் புத்தகம் , அரண்மனை வாயில் வழியே உங்களை அழைத்துச்சென்று , அந்தப்புரத்தின் பின்கதவு வரை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது . இந்திய சமஸ்தானங்கள் குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான , முக்கியமான பதிவு