Showing 97–112 of 466 results
-
Add to cart
காஃப்கா கடற்கரையில் / Kafka Kadarkarayil
₹900₹837தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான் . அவன் அப்பாவின் சாபம் ஒரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது . முதியவர் நகாடா , தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர் . சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை . எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது . இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க , பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன . வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன . ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள் . இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள் . குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது . ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை . இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன .
-
Add to cart
காகித மலர்கள் / Kaakita Malarkal
₹440₹409சூழலியல் சார்ந்த அக்கறைகள் , தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை , பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை , புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு , ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘ காகித மலர்கள் ’ நமக்கு அளிக்கும் சித்திரம் . இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது .
-
Add to cart
காதல் கடிதம் / Kadhal Kaditham
₹90₹84வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் ‘ காதல் கடிதம் ” . 1943 இல் வெளியானது . ஒரு ‘ தமாஷான கதை ‘ என்று எழுதியவரே குறிப்பிட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல . எழுதப்பட்ட காலத்தின் சமூகப் பழக்கத்தை என்ளி நகையாடவும் காதலின் சிக்கலைப் பேசவும் காதலர்களின் சாதுரியங்களைப் பேசவும் செய்கிறது . பிற்காலத்தில் பஷீர் எழுதிய படைப்புகளின் ஆதார குணங்கள் இந்தத் தொடக்க கால நாவலிலேயே புலப்படுகின்றன . அநாயாசமாகச் செல்லும் கதையாடல் , தனித்துவமான மொழி , கதாபாத்திரச் சித்தரிப்பில் மறைந்திருக்கும் நுட்பம் ஆகிய இயல்புகள் இந்தப் புனைவை முக்கியமானதாக்குகின்றன . எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்பும் வாசிப்புக்கு உகந்ததாகவும் காலத்துக்குப் பொருந்தியதாகவும் இந்த நாவல் நிலைபெற்றிருப்பது பஷீரின் மேதைமையால் மட்டுமே . காலம் பஷீரைக் கடந்து செல்லவில்லை . மாறாக பஷீர் காலத்தைத் தாண்டிச் செல்கிறார் என்பதை ‘ காதல் கடிதம் ’ உறுதிப்படுத்துகிறது .
-
Add to cart
காமரூபக் கதைகள் / Kaamarooba Kathaigal
₹499₹464சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன . ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது . அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை . பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல் . அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது . இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை . மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் . ஒற்றர்கள் , மறைந்து திரிபவர்கள் , தண்டிக்கப்படுபவர்கள் , தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது .
-
Add to cart
காயாம்பூ / Kaayaampuu
₹425₹395” குழந்தைகள் .. ? ” என்னும் கேள்விக்கு ” இல்லை ” என்று சொல்லி மெல்லியதாகப் புன்னகைக்கும் பெண்கள் பலரைப் பார்த்திருப்போம் . அந்தப் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் வலி அவர்கள் மட்டுமே உணரக்கூடியது . குழந்தைக்கான தனிப்பட்ட ஏக்கம் ஒருபுறமிருக்க , குழந்தையின்மையால் குடும்பத்திலும் சமூகத்திலும் ஆண்மை / பெண்மை மீது சுமத்தப்படும் அவமானங்கள் இந்த வலியைப் பல மடங்காகப் பெருக்கக்கூடியவை . குழந்தைப் பேற்றுக்கான சிகிச்சைகள் தரும் உடல் , மன உலைச்சல்களின் சொல்லொணாத வேதனைகள் தனிக்கதை .குழந்தையின்மை தரும் வலி குறித்துப் பொதுச் சமூகம் அதிகம் அறிந்திராத பல பரிமாணங்களை அனுபவங்களாக வாசகருக்குத் தருகிறது காயாம்பூ . மனவெளியிலும் புற உலகிலும் நந்தினி மேற்கொள்ளும் துயரார்ந்த பயணங்களின் தடங்களைச் சுமந்தபடி புனைவு வெளியில் சலனம் கொள்கிறது அது . நுண்ணுணர்வு மிகுந்த சித்திரிப்புடன் , பிறர்மீது புகார்களை அடுக்காத பக்குவத்துடன் காயாம்பூவின் நிறத்தையும் மணத்தையும் அதன் இழைகளையும் சித்திரித்திருக்கிறார் லாவண்யா .படைப்பில் வெளிப்படும் அனுபவங்களை வாழ்ந்து பெற்றதுபோன்ற உணர்வைத் தருவது வலுவான புனைவெழுத்தின் கூறுகளில் ஒன்று . ‘ காயாம்பூ ‘ அத்தகைய ஒரு படைப்பு .அரவிந்தன் -
Add to cart
காலமாற்றம் / Kaalamaatram
₹320₹298காலத்துக்கேற்ற முன்னோக்கிய பயணத்தில் , மனதின் பிடி இடையிடையே கைவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறது . அப்போது பல்வேறு மொழிகள் பேசுகிற , பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அயல்வாசிகளும் , சக ஊழியர்களும் , வெறும் அறிமுகம் மட்டுமே உள்ள ஏராளமான மனிதர்களும் அடங்கிய நீண்டதொரு வரிசை மனக்கண்ணில் தங்கி நிற்கிறது . எனது ஆன்மாவினுள் என்றோ கலந்துபோயிருந்த அவர்களது மகிழ்ச்சியும் வேதனைகளும் என்னுள் புனர்ஜென்மம் பெறுகின்றன . அவை உருவாக்கும் மனவுணர்வுகள் இலக்கியத் தாகத்துக்கு நீரூற்றாக அமைகின்றன .ஆகவேதான் , எனது பல படைப்புகள் கேரளத்துக்கு வெளியே நிகழும் வாழ்க்கை அனுபவங்களைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன . தான் வாழ்கின்ற சூழல்களில் இருந்துதான் ஒரு படைப்பாளி தனக்கான கிரியாஊக்கியைப் பெற இயலும் . எனில் , நீண்ட முப்பத்து மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில் ஒடியாவின் மண்வாசம் வீசுவதுதான் இயல்பு . ‘ கால மாற்றம் ‘ என்னும் இந்த நாவலின் கற்பனைக் கதாமாந்தர்களும் ஒடிசா கலாசார பின்னணியுடன்தான் வந்துபோகிறார்கள்.