Showing 65–80 of 466 results
-
Add to cart
எர்தா / Erta
₹375₹349விண்ணலிருந்து புவிக்கு வருபவர்கள் புனைவிற்கு புதியவர்களல்ல , ஆனால் காலந்தோறும் அப்புனைவுகளுக்கான தேவை வேறு ஒன்றாக இருக்கிறது . நவீன மொழியில் பல்மதத்தன்மை ( Syctretic ) கொண்ட ஒரு பாத்திரத்தை படைப்பது அரசியல் ரீதியான சவாலாகவும் ஆகிட , அரசியலின் பொருட்டே அதனைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர் . அதே நேரம் எர்தா ஒரு சுவாரசியமான நாவலாகவும் வந்துள்ளது .
-
Add to cart
எலியின் பாஸ்வேர்டு / Eliyin Password
₹35₹33நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை . விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை . பாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டில் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது .
-
Read more
ஒச்சை / Ochai
₹180₹167சொற்களில் அழகானவை , அசிங்கமானவை என்று பேதம் கொள்ள முடியுமா ? மக்களும் அவர்தம் நிலமும் கொண்டிருக்கிற தனித்துவம் அதில்தானே இருக்கிறது என்கிற மீரான் மைதீன் , எளியவர்களின் மொழியையும் , அதிகாரத்தின் மொழியையும் மறைப்பின்றி எழுதியிருக்கிறார் . இயற்கையின் பெருங்கருணையால் வசப்பட்ட வாழ்வு வன்மத்தின் பிடியில் சிக்கும்போது , கொலையும் பழியுமாக எவ்வாறு வதைபடுகிறது என்பதைச் சொல்கிறது ஒச்சை .பரிவும் தர்க்கமும் கொண்டு வாழ்வின் அநித்தியத்தை உணர்ந்தவனான கோயாவின் வாழ்வு சிதைபடுவதைச் சுற்றி விரிகிற கதைக்களம் , பாவம் ஒரு பக்கமும் பழி மறுபக்கமாய் வேறு வேறு திசைகளில் செல்லும் எளிய மனிதர்களின் வாழ்வை அவர்களுக்கேயான பாடுகளோடு விவரிக்கின்றது . சுற்றியுள்ள மனிதர்களின் நல்லதும் பொல்லாததுமான வார்த்தைகள் உருவாக்கிய சிறகு முளைத்த கதைகள் வெளியெங்கும் திரிய , வலியாற்றங்கரை மணலில் நாமும் கால் பதிய நடக்கிறோம் ; ஒவ்வொரு பாத்திரத்தையும் சந்தேகத்தோடு பின்தொடரச் செய்கிற மீரானின் மொழி , அதிகாரத்தின் கரங்கள் நிராதரவான மனித வாழ்வில் கடுமை கொள்ளும்போது , அந்த நெருக்கடியை , பயத்தை நம்மிடம் கடத்துகிறது . கேட்க நாதியற்றவர் வாழ்க்கை யாரும் சிதைத்திடக்கூடிய மணல் வீட்டைப் போன்று நிர்கதியாய் நிற்கின்றது எனச் சித்திரமாக்கும் அவர் , கண்ணீரையும் சாபத்தையும் தவிர அவர்களால் இயன்றது வேறென்ன ? மிச்சமிருப்பது ஒச்சைகள்தானே … என நம்மிடமே கொடுக்கிறார் திரை மூடும் கயிற்றை .– ந . கவிதா -
Add to cart
ஒரு புது உலகம் / Oru Pudhu Ulagam
₹235₹219ஒரு புது உலகம் : ஜெயோஜித் சாட்டர்ஜி , அமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிகிறான் . விவாகரத்தான ஓர் ஆண்டு கழித்து , ஏழுவயது மகன் போனியுடன் கல்கத்தாவிற்கு வருகிறான் பெற்றோருடன் விடுமுறையைக் கழிக்க . ஆறுமாதம் அம்மாவுடனும் ஆறுமாதம் அப்பாவுடனும் வசிக்கவேண்டிய நிலையில் மகன் .கடந்தகாலத்திலும் , நிகழ்காலத்திலும் மாறிமாறிப் பயணிக்கும் ஜெயோஜித்தின் நினைவோட்டங்கள் ; மகனின் , பேரனின் எதிர்காலம் குறித்தச் சிந்தனையில் பெற்றோரது மனவோட்டங்கள் என்று புது உலகம் விரிகிறது , மெல்ல , மெல்ல .ஆழமாகவும் , மென்மையாகவும் எழுதப்பட்டுள்ள நாவல் . நம்பிக்கைகள் , விருப்பங்கள் , வருத்தங்களால் நிரம்பியிருக்கும் ஒரு குடும்பத்தின் இதயத்தைத் தெளிவாக , உயிர்ப்புடன் படம்பிடிக்கிறது .