Showing 81–96 of 205 results

  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    தேசாந்திரி / Desanthiri

    275 256

    மனிதர்கள் உலகத்தை அறிந்து கொள்ள பயணப்படுதல் அவசியமானது . இலக்கற்ற பயணியான எஸ்.ரா. தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார் . பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை , மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்

    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    நத்தையின் பாதை / Nathaiyin Paathai

    100 93

    இலக்கியம் விந்தையானதொரு கலை . முதன்மையாக கலையென நிலைகொள்கிறது . எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை . ஆனால் இலக்கியமென்னும் அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட . ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது . ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது . பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில் , அரசியலில் பங்கெடுக்க முடிகிறது . கலை அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன . பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை , சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன . இலக்கியம் எழுதுவது , வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று . இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை

    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    நாத்திக குரு / Naathiga Guru

    260 242
    ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது , இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன . இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும் . தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை இக்கட்டுரைத் தொகுப்பு கொடுக்கவும் இவை உதவும் என்ற சுயநலமும் இருக்கிறது . தனது எழுத்து விரும்பிப் படிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவும் அல்லவா ?
    – இரா.முருகவேள்
    Add to cart
  • SAVE 7%

    நாயக்கர் காலம் இலக்கியமும் வரலாறும் / Naayakar Kalam Elakkiyamum Varalarum

    200 186
    இந்த நூல் தருக்கமுறையில் வரலாற்றைச் சொல்லிச் செல்கிறது . இதிலே காலங்களின் இயங்குநிலைகளோடு கூடிய வரலாறு இருக்கிறது . மன்னர் களின் , பாளையங்களின் வாரிசுரிமைகளும் அதிகாரப்பகிர்வுகளோடும் கூடிய அரசியல் இருக்கிறது . சாதிகளாகவும் , வலங்கை – இடங்கையாகவும் , வேளாண் குழுக்களாகவும் , வாணிகக் குழுக்களாகவும் , சேவைக் குழுக்களாகவும் கட்டமைந்து கிடந்த சமூக அமைப்பு இருக்கிறது . குடும்பம் , பெண் , நிலப்பாகுபாடு , கல்வி , கலை முதலியவை உள்ளிட்ட பண்பாட்டுத் தளம் இருக்கிறது . நிலமானியங்கள் , பண்ணை உற்பத்திமுறை , கைத்தொழில் , வாணிகம் உள்ளிட்ட பொருளாதாரம் இருக்கிறது . மொத்தத்தில் , தமிழகத்தில் நாயக்கர்காலத்தின் பன்முகப்பட்ட பரிமாணங்களைக் காணுகிறோம் . நுணுக்கமாக விவரங்களும் , இயங்குநிலைகளோடு கூடிய நிகழ்வுகளும் அவற்றின் எதிர்வினைகளும் , வெறுமனே நீள்படுக்கையாக அல்லாமல் விமரிசனத்தோடு எடுத்துரைக்கப்படுகின்றன .
    இந்த ஆராய்ச்சிக்கு , ஏற்கெனவே சொன்னதுபோல , இலக்கியங்களே மூலாதாரம் . பின்னிடைக்காலத்து மொழியையும் அதன் பொருண்மையையும் உள்நுழைந்து வாசிப்புச் செய்தால் தெரியும் , இது எவ்வளவு சிரமமானது என்று . இந்த மொழிக்கிடங்குக்குள் ஆழந்தெரியாமல் காலை விடக் கூடாதுதான் . ஆனால் முத்துக்களும் பவழங்களும் ஆழத்துக்குள் தானே படிந்து கிடக்கின்றன . ஆழங்கால்படுவது ஆராய்ச்சியின் அறைகூவல் , அதனை அ . ராமசாமி ஏற்றுக்கொண்டு , இந்த இலக்கியங்களில் மூச்சடக்கி மூழ்கி முத்துக்களை வாரியெடுத்துத் தந்திருக்கிறார் .
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    நிலம் கேட்டது கடல் சொன்னது / Nilam Kettathu Kadal Sonnathu

    125 116

    ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் கண்ட வால்டன் ஏரி என தனது பயணத்தில் வழி பெற்ற அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் மூலம் நம்மையும் அனுபவிக்கச் செய்திருக்கிறார் . ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது .

    Add to cart