சிறுவனாக இருக்கையில் நீச்சலடித்து ஆற்றைக் கலக்கி கண்சிவக்கக் குளித்த இந்த ஆற்றுக் கடவுகளில் இன்று கால் நனைக்க ஒரு துளி தண்ணீர் இல்லாது வறண்டு கெட்டுப் போய் கிடப்பதைப் பார்க்கும்போது எதையெல்லாமோ இழந்துவிட்ட ஓர் ஏக்கம் எனக்குள் என்னிடமிருந்து நான் பிறந்து வாழ்ந்த மண் அந்நியப்பட்டு விட்டதாகவோ , அல்லது பிறந்த மண்ணிலிருந்து நான் அந்நியப்பட்டு விட்டேனோ என்று எனக்குத் தோன்றினாலும் என் படைப்பு மனதில் அன்றைய பசுமைக்கிராமம் எழில் குன்றாமல் இருந்து வருகிறது .
இப்போது தொலைவிடத்தில் நான் தங்கி வந்தாலும் என் ஆத்மாவின் வேர்கள் ஓடிக்கிடப்பது இப்பவும் நீராலும் தென்னைகளாலும் சிறு மலைகளாலும் சூழப்பட்ட அரபிக்கடல் அலைகளின் இசை இனிமையில் புல்லரித்துக் கொண்டிருக்கும் அழகிய கன்னிக்கிராமத்தில் தான் . என் அடிமனதில் என் கிராமம்தான் எப்போதும் .
உலகப்புகழ்பெற்ற நாவல்களையும் அதன் முக்கியத் துவத்தையும் அடையாளப்படுத்துகிறது இந்நூல் . நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கிய வடிவம் . உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள் . நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன . செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும் , எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .