Showing 3201–3216 of 3255 results
-
Add to cart
யாமம் / Yamam
₹400₹372இரவின் தாழ்வாரங்களில் நடந்து திரிந்து அதன்விசித்திரங்களை அறிந்த அப்துல்கரீமின் கதை புதினத்தின் முற்பகுதியைக் கட்டமைக்கிறது . இரவை சிருஷ்டிக்கும் சூட்சமம் விரல் வழியாக யாமம் என்னும் வாசனைத் திரவியம் ஆகிறது . யாமத்தின் பெரும் நிகழ்வுகள் , போராட்டங்கள் , துயரங்கள் , களியாட்டங்கள் எல்லாவற்றையும் ஊடறுத்துக் கொண்டு பண்டாரமும் நாயும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் . பண்டாரமும் நாயும் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக முதல் முதலாக ஒரு அசலான தமிழ்ப் பண்பாட்டுப் புனைவை புதினமொன்றில் படிக்கிறோம் .– கவிஞர் சமயவேல் -
Add to cart
ரஜினிகாந்தின் சூரிய மேடு / Rajinikanthin Sooriya Medu
₹225₹209நான் நமீதாவைச் சந்தித்தது பற்றி எழுதிய போது அவரை ஒரு வரி வர்ணித்ததும் அதை ஏதோ ஈவ் டீசிங் லெவலுக்குக் கொண்டு சென்றார்கள் . ஆனால் குஷ்வந்த் சிங் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அழகைப் பற்றியே வர்ணித்திருக்கிறார் . ஆக , தமிழர்களின் பொதுவான சிடுமூஞ்சித்தனத்துக்கு பத்தி எழுத்தே ஆகாதோ என்றுகூடத் தோன்றுகிறது . ஒரு பத்தி எழுத்தாளர் என்பவர் மிகவும் வண்ணமயமாள நபராக இருக்க வேண்டும் . இந்தத் தொகுப்பு அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் .– சாரு நிவேதிதா -
Add to cart
ராஸ லீலா / Raasa Leela
₹900₹837அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா . மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும் . ஜாக்கிரதை , படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும் . அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம் . நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத , நான் – லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம் . ஆரம்பமும் முடிவும் அற்ற இந்தப் பித்தவெளிப் பிரதேசம் ‘ சைபர் ‘ உலகின் அபத்த நாடகங்களை பெரும் கேளிக்கையாகவும் கேலிச் சித்திரங்களாகவும் மாற்றுகிறது . சர்வதேச இலக்கியப் பிரதிகளும் சினிமாவும் உப பிரதிகளாக ஊடுபாவும் உப பாதைகளில் பயணிக்கத் துவங்கும் ஒரு வாசகர் தன் வாழ்நாளுக்குள் வாசித்துத் தீர்க்க முடியாத ஒரு மகத்தான சவாலையும் இந்த நாவல் முன்வைக்கிறது .– மே . அருணாச்சலம் , மதுரை