கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட் . கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட . கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின் கணவனை அவளுடைய கதைகளில் ஒன்றாகக் கண்டுபிடிக்கிறார் கிரிஃபித் அப் ஒவைன் .
பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது . தராசில் வைக்க ‘ தாண்டவராயன் கதை ‘ இருக்கும்போது எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம் .
( ராஜன் குறை , ‘ குமுதம் தீராநதி ‘ )
‘ தாண்டவராயன் கதை ‘ ஒரு அசாதாரணமான நூல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது .
ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத் தகுதியற்றவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம் . அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர் மூச்சாக்கிக் கொடுத்து மெல்லமெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில் . மடித்துப் போடப்பட்டிருக்கிற வாழ்க்கையை நிமிர்த்துவதற்குள் தாம் எவற்றையெல்லாம் இழக்கிறோமென அறிந்துகொள்ள விரும்பாத மனிதர்களிடமிருந்தே சமூகத்திற்கான ஊட்டச் சத்து கிடைக்கின்றது .
இத்தகைய வரம்புகளுக்குள்ளேயே நின்று இம்மக்கள் மேற்கொள்கின்ற யத்தனங்களுக்குள் நம் குருதியோட்டமும் கலந்துவிடுகிற மாதிரி தோப்பில் முஹம்மது மீரானின் கலையாற்றல் மேம்பட்டிருக்கிறது . அதனால்தான் நாம் இம்மனிதர்களைப் பிரிந்துவிடாமல் அவர்களின் பக்கமாய் நிற்க விரும்புகிறோம் .