இருளின் அரங்கத்தில் ஒளியின் பிம்பங்கள் அசைவது போல் சமூகத்தின் மூடப்பட்ட சன்னல்களின் பின்னே நூலாம்படைகளாய் சிக்கிக்கொண்ட பெண்ணின் அகவெளியானது மொழியின் வழியாக கவிதையாகவும் , கவிதையின் வழியாக வாழ்வின் அகம் புறம் என்ற பேதமின்றி சொற்களையும் விடுதலை செய்கிறது . வாழ்வின் தீராத வெம்மைகளுக்கு இடையேயும் இடைவிடாத ஒரு வாசிப்பின் இடைவெளியில் பெரும் மழைக்குப் பின்னான சிறு தூறல் போல் அவ்வப்போது என் மனவெளியில் விழும் சொற்களை அரிதாக கைப்பற்றிக் கொண்ட தருணங்களே இக்கவிதைகள் .
இந்தக் கதைகளில் இடம்பெறும் கிராம மக்களின் வாழ்க்கையும் . கிராமங்களின் நிலப்பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன . நிலம் முக்கியக் கூறாக இருக்கிறது . பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன . விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக இந்தக் கதைகளில் தென்படுகிறது . தெப்பக்குளம் அர்த்தப்படுத்தும் வகையில் சொல்லப்படுகிறது . ஆறு போன்றவை அதன் அர்த்தம் குறித்து சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன . கிணறுகள் பற்றி பல்வேறு சித்தரிப்புகள் கதைகளாக வந்துபோகின்றன .
இவரது இயற்பெயர் T. கார்த்திக் . திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சியில் வசிக்கிறார் . தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருக்கிறார் . முகநூலில் யாத்திரி ( HTTPS://WWW.FACEBOOK.COM/KARTHIKT1986 ) என்ற புனைப்பெயரில் 2010 ம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார் . பெரிதாக முகநூல் தாண்டி பொதுவெளியில் அறியப்படாதவர் . இது அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு . காதல் மற்றும் காதலின் மன ஊடாட்டங்களைப் பற்றியும் பிரிதலைப் பற்றியும் எழுதுவது அவருக்குப் அவருக்குப் பிடித்தமான ஒன்று . பிரிதலின் புரிதல் குறித்து அடிக்கடி எழுதக் காரணமாக அவர் சொன்னது – ” காதலிக்க மறுத்த பெண்ணை , காதலில் இருந்து விலகிய பெண்ணை , கத்திக்குத்து , கொலை , திராவகம் வீச்சு , என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம் . அன்பின் உச்சம் வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும் . அளவில் சிறியதோ பெரியதோ எல்லாருக்குள்ளும் அவ்வன்முறை தலைதூக்கும் . மூர்க்கம் கொண்ட ஒரு மனமேனும் தன்னை விட்டுப் பிரிந்த பெண்ணை உளமார ஆசிர்வதிக்குமெனும் நப்பாசை . அதனால் எழுதுகிறேன் ” என்கிறார் . அவர் ஆசை நிறைவேறட்டும் .