Showing 33–48 of 50 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மறக்கவே நினைக்கிறேன் / Marakkave Nenaikiren

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மானாவாரி மனிதர்கள் / Manavari Manithargal

    150 140

    இன்றைய அறிவியல் வளர்ச்சியில் , பிரபஞ்சவெளியில் பிற கோள்களை ஆராய்ச்சி செய்கிறான் மனிதன் . இந்த பூமியில் மணிதகுணம் வாழ்வதற்குத் தண்ணீரும் , உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட இது பொருத்தும் சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக் கருத்தை கொங்கு கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய இலக்கியத்திற்கும் மகிமை சேர்த்துள்ளார் சூர்யகாந்தன் , இந்த மானாவாரி மனிதர்களில் இவர் கூறியுள்ள தண்ணீர்ப் பிரச்சனை அழுத்தமான குறியீடாகவே வலிமை பெறுகிறது . மனிதர்களின் அனைத்துப் போராட்டங்களையும் எதிரொலிக்கும் அர்த்தமாகவும் ஆகிவிடுகிறது .. மூக்காலத்தையும் கடந்து எக்காலத்திலும் நிலைபெறும் இலக்கியமாக இந்தப் படைப்பு உயர்வதற்கு இதுவே சாத்தியமாகிறது . அமரர் அகிலன் நினைவு நாவல் விருதும் , ஆண்டின் சிறந்த நாயலுக்கான இலக்கியச் சிந்தனை விருதும் இதற்கு எளிய அங்கீகாரங்களே . மக்கள் இலக்கியத்தில் இந்த நாவல் மணிவிளக்காக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்பதே மகத்தான விருது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    முத்தியம்மா / Muthiyamma

    90 84
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மூன்றாம் பிறை / Moondram pirai

    130 121
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மேய்ப்பர்கள் / Meypparkal

    300 279
    படைப்பாளிகளின் அணுக்கச் சூடில்லாமல் , பவா , சில மணி நேரங்களை கூட உங்களால் கடந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை .
    அணுக்கச் சூட்டின் தேடுதலும் , அந்த அனுபவம் தந்த உன்மத்தமும் தான் இந்நூல் முழுதும் நிரம்பியிருக்கிறது .
    “ ஒரு நாகரீக சமூகத்தின் முதன்மை சிம்மாசனம் எப்போதும் கலைஞனுக்குதான் ” எனும் வரிகளில் கலைஞனின் ராஜபாட்டையின் விஸ்தாரம் என்னவென்று சொல்கிறார் பவா .
    உன்மத்தம் மட்டுமல்ல .. நெகிழ்ந்தோ , கனிந்தோ , மருகியோ , துக்கித்தோ , மௌனித்தோ இருக்கும் ஏதோவொரு மனவெளியில் இந்த எழுத்து நம்மை நிறுத்தும் .
    காயத்ரி ( USA )
  • Out Of Stock SAVE 8%
    Read more

    யானை டாக்டர் / Yanaai Doctor

    40 37
  • Out Of Stock SAVE 7%
    Read more

    யேசு கதைகள் / Yesu Kathaigal

    120 112

    கிறிஸ்தவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டு , இழிவுபடுத்தப்பட்டு , தண்டிக்கப்பட்டு , அடிமைப் படுத்தப்பட்டு , வியாபாரமாக்கப்பட்டுள்ள இயேசுவை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து அவருக்கு மீட்பு வழங்கி , சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் , எல்லா மக்களின் அன்பும் , அரவணைப்பும் , முத்தங்களும் அவருக்குக் கிடைக்கவும் பால் சக்காரியா போன்ற இலக்கியவாதிகள் , வேறு சமய நம்பிக்கையாளர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எடுக்கும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும்

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ராஜவனம் / Rajavanam

    70 65
    வாழ்வின் சுவாரஸ்யமே , தெரியாததைத் தெரிந்து கொள்வதும் , புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே ! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது . இந்த உலகமே ஒரு குடும்பம் ; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர் , வனம் , நதி , மலையோடு விலங்குகள் , மரம் , செடி கொடிகள் , பறவை , பட்சிகளென தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து , அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது . இப்பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய்த் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும் .
    ஆர் . என் . ஜோ டி குருஸ்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    விலகி ஓடிய கேமிரா / Vilaki Odiya Camera

    120 112

    ‘ விலகி ஓடிய கேமரா ‘ புத்தகம் முழுக்க ஒரு பெருவாழ்வின் நதி நீர் சுழித்து சுழித்து ஓடுகிறது . இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு , பரிசுத்தமாய்ப் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்வனுபவங்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறது . அனுபவம்தான் நமக்கு வாழ்வியல் நெறியை , அதன் சூட்சுமங்களை அள்ளிக் கொடுக்கிறது . அதுமட்டும்தான் இப்புத்தகப் பக்கமெங்கும் பரவிக்கிடக்கும் உண்மை .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    வெண்கடல் / Venkadal

    200 186

    அறம் வரிசை சிறுகதைகளின் தொடர்ச்சியாக அதே அலைவரிசையில் எழுதப்பட்ட பதினோரு கதைகளின் தொகுப்பு வெண்கடல் . உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம் . ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன . பெரும் பிரபஞ்ச இயக்கத்தில் சிறு துளியாக இருக்கும் மனித வாழ்வினை அதன் தருணங்களின் வழியேதான் நினைவு கூரவோ அடையாளப் படுத்தவோ முடிகிறது . மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள் . இதில் வரும் மனிதர்களின் வழியே நாம் சந்திக்கவிருக்கும் அந்த நிகழ்வுகள் இதற்கு முன்போ அல்லது இனியோ நம் வாழ்வில் நிகழ்ந்த , நிகழ இருப்பவை .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    வெள்ளையானை / Vellaiyyaanai

    500 465
    உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம் . ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் . மறு பக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே . நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும் .
    இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது . எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் .
    ஜெயமோகன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஸ்வரபேதங்கள் / Swarabethangal

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அறம் / Aram

    400 372
  • Out Of Stock SAVE 7%
    Read more

    எல்லா நாளும் கார்த்திகை / Ella Nalum Karthigai

    200 186