Showing 17–32 of 50 results

  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    சுருக்கப்பட்ட நெடுங்கதைகள் / Surukkapatta Nedungkathaikal

    250 233

    ஒருவர் எழுதுவதற்கான எத்தனையோ முறைகள் உண்டு . அதற்கான சட்டகங்கள் உண்டு . ஆனால் எந்த சட்டகத்திற்குள்ளும் நில்லாது குமாரி எழுதுவார் . ஏனெனில் அவர் முன்னே இருப்பது , மனித வாழ்வும் அதன் தவிப்புமே . இங்கு ஒரே கயிற்றில் ஒரே நேரத்தில் ஊசலாடுகிறது பல்வேறுபட்ட மனித வாழ்வுகள் … மனங்கள் … குமாரியின் கதைகளுக்கூடாக .

    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    நிலம் / Nilam

    150 140

    தமிழில் இன்று இயங்கிவரும் எந்த எழுத்தாளனும் அறியாத விளிம்புநிலை மனிதர்களின் பிரதேசங்களை அறிந்திருப்பவர் பவாசெல்லதுரை மட்டுந்தான் . பொதுப் பார்வையின் வெளிச்சத்தில் படாத வேட்டைக்கார நரிக்குறவர்களையும் , இனத் தொழிலாக களவைக் கைக்கொண்டிருக்கும் உப்புக்குறவர்களையும் , எலி , பாம்புகளை வேட்டையாடிக் கொண்டு , உபதொழிலாக வீடுபுகுந்து திருடும் இருளர்களையும் , கிணறு வெட்ட குழுவாக வரும் ஒட்டர்களையும் இவர் கதைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது .
    இவரின் கதையுலகில் நுழைந்துவிட்டால் எதிர்ப்படும் விநோதங்கள் எல்லாமே அபூர்வமானவை . மல்லாட்டையை உரித்தால் வெளியே வரும் ரோஸ்நிற தேவதைகளும் , மரங்களில் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும் சி றுவர்களும் , கிணறு வெட்டும்போது புதுத்தண்ணி மண்ணைப் பிளந்து கொண்டு பீறிடும்போது வளையல்களைக் கழற்றி அந்தக் கிணற்றுக்குள் எறிபவளும் , அப்பா அடிப்பதற்கு உயர்த்திய கையைப் பிடித்து முறுக்கியவனும் மறக்க முடியாத நுட்பமான வாசி ப்பனுபவத்தை வாசகர்களுக்கு அளிப்பவர்கள் .
    ஜி.குப்புசாமி

    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல / Basheerin Arai Athanai Elithil Thirakakudiyadhalla

    150 140

    நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க , அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான் , நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன் . கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்தைப் பற்றி நீ சொன்ன வர்ணனைகளின் கோடுகளினூடே நான் பவாவின் ‘ நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை ‘ என்ற அக்கதையை உனக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறேன் .

    Read more
  • SAVE 7%

    பாதையில்லா பயணம் / Padhaiyilla Payanam

    150 140

    பாரதி , புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள் . நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர் . எந்த ஒரு தத்துவ , இலக்கிய , மதப்பார்வை களிலிருந்தும் தனித்ததான , தேர்ந்ததான , சுயமான தாகத்தெரியும் சிந்தனைவீச்சை அவர் கொண்டு இருந்தார் . உலகளவிலான பெரும் சிந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணுக்கங்கள் , அவரது பேச்சிலும் , எழுத்திலும் தெறிப்பாகப் பிறந்து ஆச்சரியப்படவைக்கும் . அந்த ஆழத்திலிருந்து பிறந்தவற்றைக் கொண்டதே இந்நூல் .

    Read more
  • SAVE 7%

    மரயானை / Marayanai

    280 260

    நிலம் என்பது பெரும் ஆவல் ஓயாமல் மாறி விழுந்து கொண்டே இருக்கும் சமுதாய , பொருளாதாரப் பேரலைப் பின்னல்களின் நடுவே நிலம் என்பது நங்கூரத்தின் பெரும்பிணைப்பு , நிலம் என்பது கடைசிப் பற்றுக்கோடு சிங்கப்பூர் என்பது ஒற்றைக் குணம் கொண்ட நிலம் என்று பலரும் நினைக்கிறார்கள் . சிறு தீவுதான் . ஆனால் இந்தத் தீவுக்குள் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வட்டாரத்துக்கும் தனிப்பட்ட வரலாறும் . குணமும் , வாசனையும் வண்ணங்களும் இருக்கின்றன . இது சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியைப் பற்றிய , அதில் வாழும் மனிதர்களைப் பற்றிய நாவல் . புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் முதியவரான சுகவனம் இறந்துபோன தனது மனைவி ஜெயக்கொடிக்காக கரும காரியங்களை செய்ய ராமேஸ்வரம் போக நினைக்கிறார் . ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாத சுகவனத்தை ராமேஸ்வரம் என்ற இடம் பயமுறுத்துகிறது . ராமேஸ்வரத்தின் அந்நியம் அவருக்குச் சவாலாய் அமைகிறது . சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியின் வரலாறு . நிலவியல் , சமூக அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களின் ஊடாக ராமேஸ்வரம் சென்று அங் கிருக்கும் கடலில் நூற்றியெட்டு முறை தலைமுழுக . விரும்பும் சிங்கப்பூர்த் தமிழர் ஒருவரின் கதையைச் சொல்கிறது , சித்துராஜ் பொன்ராஜ் – இன் ‘ மரயானை ‘ நாவல் .

    Read more