ஜென்னுக்கு விளக்கம் விளக்கம் சொல்லவேண்டு மானால் நாமே ஒரு ஜென் ஆனால்தான் முடியும் . செய்யும் தொழில் எதுவானாலும் அதிலேயே மூழ்கிப் போ என்பது கூடத் தவறு . அதுவாகவே மாறிவிடு என்கிறது ஜென் .
நாம் வாழும் வாழ்வை அழகாக , அர்த்த முள்ளதாக அமைத்துக்கொள்ள ஜென்னைப் பின்பற்றுவது மிகவும் நல்லது .
பின்பற்றுவதற்கு முன்னால் அதைப் புரிந்து கொள்வது அவசியம் . ஜென்னைப் புரிந்து கொள்ள ஜென் கதைகள்தான் சிறந்த வழி . இந்தப் புத்தகம் ஏராளமான ஜென் கதை களை அள்ளித் தருகிறது .
விஞ்ஞானம் தேடிய வரையில் எந்தக் கோளிலும் உயிரினங்கள் இல்லை . காரணம் , அவற்றில் காற்று இல்லை . காற்றுள்ள பூமிக் கோளில் மட்டுமே உயிரினங்கள் உள்ளன . அவை தோன்றி மறையும் வரை காற்று தேவை . பூமியில் தோன்றுவன யாவும் அழியக்கூடியவை . ‘ தோன்றாத பொருளான ‘ காற்றில் இருந்தே ” தோன்றும் பொருளான ‘ உயிரினங்கள் பிறக்கின்றன . அப்படிப் பிறந்த உயிரினமான மனிதனே , தன்னையும் உலகையும் ஒப்பிட்டுப் பார்த்தான் . இன்ப , துன்பங்களுக்கான காரணம் தானே என்றும் கண்டான் . அழியும் உடலுக்குள் அழியாப் பொருளே தீர்வாக இருப்பதை அறிந்து , சுவாசத்தின் வழியே தேடினான் . ‘
பிராணாயாமம் ‘ என்ற மூச்சுப் பயிற்சியால் முயற்சித்த போது இளமை , ஆரோக்கியம் , இன்பம் , ஆயுள் போன்றவை நீடிக்கக் கண்டான் . முடிவில் , தன்னையே தனக்குள் தரிசித்தான் ! அழியக் கூடிய தன்னுள்ளே அழியாப் பொருளை உணர்ந்தபோது உலகை வென்றான் .
பிறவிக்கு , பிறவியைக் கொண்டே முற்றுப்புள்ளி வைத்து ‘ பிறவா நிலையும் பெற்றான் .