ஊரடங்கு காலத்தில் இணையத்தில் எழுதப்பட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு . உலக இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்கள் . இதில் இதாலோ கால்வினோ , போர்ஹெஸ் , கவாபட்டா , மிரோஜெக் போன்றவர்கள் முக்கியமானவர்கள் . எஸ்.ராவின் குறுங்கதைகளைக் கவிதைக்கும் கதைக்கும் இடைப்பட்ட இலக்கிய வடிவமாகக் கருதலாம் . கவித்துவமான மொழியில் புனைவின் முடிவற்ற சாத்தியங்களைத் தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் .
அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம் . ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் அறிந்துகொள்ள வழிகாட்டுகின்றன இக்கட்டுரைகள் . அறிவியல் , இலக்கியம் , சினிமா , கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளையும் இக்கட்டுரைகள் ஒன்றிணைக்கின்றன .
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது . அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள் . கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விக்குறி .
சரித்திரத்தின் சாட்சியாக இருப்பவர்கள் யாத்ரீகர்கள் . உலகப்புகழ் பெற்ற யாத்ரீகர்களையும் அவர்களின் சாகச அனுபவத்தையும் விவரிக்கிறது கோடுகள் இல்லாத வரைபடம் கடலோடிகளின் குறிப்புகள் அன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்து அறிந்து கொள்ள பேருதவி செய்கின்றன . மிளகும் கிராம்பும் தேடி தான் போர்த்துகீசியர்களும் டச்சுகாரர்களும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இந்தியா வந்தார்கள் . இதன் தொடர்ச்சியாகவே கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டது . வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்துவதன் வழியே சமகாலத்தின் போக்கினை அறியச் செய்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் .
பள்ளிக்கூடம் என்பதே சில்வதைகளின் கூடாரமாகிப் போன சூழலில் கற்பனையும் அறிவுத்திறனும் கொண்ட ஒரு மாணவன் மனப்பாடம் செய்யும் இருன் காரணமாக தண்டனையை அளிப்பதற்கென்றே உருவாக்கபட்ட விந்தையான பள்ளி ஒன்றில் சேர்க்கபடுகிறான் . அங்கு அவன் சந்திக்கும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக விவரிக்கிறது சிறார்களுக்காகத் தொடர்ந்து எழுதி வரும் எஸ்பராமகிருஷ்ணன் கல்வி குறித்த விழிப்புணர்வை தையாக்கித் தந்திருக்கிறார் .
முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் . சாத்தியமில்லை . சமூகத் தடைகளும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும் சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டுதானிருப்பார்கள் , கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள் . சகமனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிறார் செகாவ் . ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் . ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் .
மனிதர்கள் உலகத்தை அறிந்து கொள்ள பயணப்படுதல் அவசியமானது . இலக்கற்ற பயணியான எஸ்.ரா. தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார் . பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை , மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் கண்ட வால்டன் ஏரி என தனது பயணத்தில் வழி பெற்ற அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் மூலம் நம்மையும் அனுபவிக்கச் செய்திருக்கிறார் . ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது .
பூமியில் இருந்த புல்வெளிகள் யாவும் சூழல்சீர்கேட்டில் மறைந்து போய்விடவே தனது ஆடுகளை ஒட்டிக் கொண்டு வானில் மேய்ச்சலுக்குப் போகிறான் ஒரு கிழவன் . பறந்து திரியும் ஆடுகளும் அதன் பயணங்களும் நமக்கு விந்தையான அனுபவத்தைத் தருகின்றன . களங்கமில்லாத மனநிலையைக் குறிக்க ஆட்டுக்குட்டியை குறியீடாகச் சொல்வார்கள் . குழந்தைகள் துள்ளித் திரியும் ஆட்டுக் குட்டிகளைப் போலவே உலகை வலம் வருகிறார்கள் . இக்கதை சிறார்களை மட்டுமில்லை பெரியவர்களையும் வானில் பறக்கவே செய்கிறது .
முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது . மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன் . முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது . அந்தச் சபை ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டங்களை நிறைவேற்றுகிறது . இதனால் ஏற்படும் பிரச்சனைகளை வேடிக்கையாக விவரிக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் .
காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன . பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டிற்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன . உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல் . ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே .
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் படைப்பாளிகள் எதிர்கொண்ட கூாங்கள் , ஆளுமை வெளிப்பாடு , வாசிப்பின் அரிய திறப்புகள் எனத் தீவிர மனவெழுச்சியை உருவாக்கும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் உழைப்பையும் படைப்பாளியின் கொண்டிருக்கிறது .