ஒரு பெண்எழுத்தாளரை கதை நாயகியாக எடுத்துக்கொண்டதற்கு காரணம் உண்டு . அவளது எழுத்துகளின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள் , கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்குப் புரிதல் இருக்கும் . அதைப் பார்த்து , புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார் .
ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிட ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது . கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான முரண்பாடுகளைக் கடந்து செல்ல இயலாதது அந்தப் பெண்எழுத்தாளரின் தோல்வியைத்தான் காட்டுகிறது .
மதுரை மீனாச்சியின் உண்மை வரலாறு என்பது , மதுரையில் உண்மையாகவே மீனாச்சி என்ற ஒரு அரசி ஆட்சிசெய்தாள் என்பது அல்ல . மதுரையின் நெடிய வரலாற்றில் , மீனாச்சி என்ற அரசி ஆட்சி செய்ததாக எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை . அப்படி ஒரு பெரிய அரசி யாரும் இல்லை . ஆனால் மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கடவுளாக வழிபடப்படும் மீனாச்சி என்ற கடவுள் எப்படி , படிப்படியாக உருவாகி , இன்று இருக்கும் கடவுளாக ஆனார் என்பதற்கு ஒரு நெடிய வரலாறு இருக்கிறது . இந்தக் கதையில் சொல்லப்படும் கதையும் உண்டு , சொல்லப்படாத கதையும் உண்டு . சொல்லப்படாத , மறக்கப்பட்ட உண்மை வரலாறும் உண்டு .
மேஜர் முருகன் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தனது குடும்பத்தினருடன் பல மாநில மக்களுடன் , பல மொழிகளைப் பேசி , பழகிய அனுபவம் பெற்றவர் . பணி என்னவோ பயிற்சி , பாதுகாப்பு , துப்பாக்கி என்று கழிந்தாலும் , எங்கு சென்றாலும் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களைத்தான் அதிகமும் கண்காணித்திருக்கிறார் . அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களையும் குணாதிசயங்களையும் அக்கறையோடு சேகரித்து எழுத்தாக்க முயன்றிருக்கிறார் .
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு , சிறுவயதில் பழகிய மனிதர்கள் , கேட்ட குரல்கள் , பார்த்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்து , எதையோ இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்த , அவற்றையெல்லாம் எழுதாமல் விட்டுவிட்டோமே என்கிற மனஉறுத்தல் தலைதூக்கியிருக்கின்றது . பிறகு , தான் பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும் தனது வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு , இக்கதைகளைப் படைத்திருக்கிறார் .
‘ மந்திரம்மாள் ‘ மேஜர் முருகன் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு . ஒரு ஆரம்ப சிறுகதைகள் எழுத்தாளருக்கே உரிய தன்மையில் இந்தச் அமைந்திருந்தாலும் , ஒவ்வொரு கதையும் தேர்ந்த எழுத்தாளரைக்கூட மிஞ்சிவிடும் அளவுக்கு கற்பனை வளத்துடன் உள்ளது என்பதை இந்நூலை வாசிக்கும் வாசகர்களும் உணர்வார்கள் .
மேற்கத்திய நாடுகளின் நலிந்த இலக்கிய நுரையீரல்களுக்குப் பிராணவாயு தரும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் , உலக இலக்கியத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது .
அதிகாரபூர்வ உண்மைகளுக்குச் சவால்விடும் சமூக , அரசியல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் , அல்பமான அதிகாரத்தைக் கிண்டல் செய்யும் , லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இந்திய கலாச்சாரத் தொடர்பை ஆராயும் , மந்திரத்தோடு விளையாடும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் , லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் படைப்புகள் .
கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து , வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள் . ஒவ்வொன்றும் தன் சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க , அதனதன் முழுமையில் நம்முள் வாழ்வாகின்றன . இந்தக் கதைகள் , என்னுள் சற்றே அசந்திருந்த , எழுத்தின் வலிமையையும் சாத்தியங்களையும் பற்றிய வியப்பையும் மதிப்பையும் மீண்டும் ஒரு முறை உசுப்பி மலர்த்தியிருக்கின்றன . அந்தளவில் தமிழ்நதிக்கு என் நன்றி . இவை , மொழிகளிடையே கூடுபாய்ந்து மனங்களிலெல்லாம் கூடுகட்ட விழைவதாக உணர்கிறேன் . ”
இவளோடு இருக்கும்போது ஏன் முன்பு டேட்டிங் செய்த பெண்ணின் நினைவு வருகிறதென வியப்பு வந்தது . அநேக பெண்கள் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறார்கள் போலும் . என்னைப் போன்றவர்கள்தான் ஒன்று இறந்தகாலத்தில் இருக்கிறோம் அல்லது எதிர்காலத்திற்கு ஓட எத்தனிக்கிறோம் . இறுதியில் நல்ல விடயங்களையெல்லாம் தவறவிட்டு விடுகிறோம் என எண்ணிக்கொண்டேன் .
எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மனது நெகிழ்வதுபோல பட்டது . முகத்தில் விரிந்த மெல்லிய புன்முறுவலை காற்றெடுத்துப் போனது . தற்செயலாய் திரும்பிப் பார்த்து , ‘ என்ன உன்பாட்டில் சிரிக்கிறாய் ‘ என்றாள் . எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும் , பெண்களில்லாத வாழ்வு சாத்தியப்படாதென ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் .