இலங்கையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தவர் . கிறித்தவ இறைப்பணியாளர் . தாய்த்தமிழின் மீதுள்ள தீராதபற்றால் இலக்கண , இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் . உலகின் சிறப்புமிக்க பல பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் . உலகெங்கும் தமிழ்த்தூதராய்ப் பயணம் செய்து தமிழியம் பரப்பியவர் . தமிழை உலக அளவில் உயர்த்திட அமைப்புகளையும் , இதழ்களையும் நிறுவியவர் . தமிழாய்வில் தோய்ந்து அதனைத் தமிழியல் ஆய்வாக வளர்த்தெடுத்தவர் . இத்தகு பெருமைமிகு தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டினையொட்டி , அவரின் பன்முகச் சிறப்பை விளக்கிடும் அறிஞர்களின் கருத்துரைக் கோவை இந்நூல் .
இரா . காமராசு : வண்டல் மண்ணின் மணம் கமழும் கதைகள் , கவிதைகள் படைத்தவர் . குழந்தைகளின் பிரபஞ்சம் உணர்ந்த கல்வியாளர் . நவீன இலக்கியத் திறனாய்வாளர் . தமிழியல் ஆய்வுத் தடங்களைச் சுட்டும் ஆய்வாளர் . இலக்கிய இயக்கமாகும் ஆளுமையாளர் , தற்பொழுது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றுகின்றார் .