Showing 161–176 of 207 results
-
Add to cart
மலை மேல் நெருப்பு / Malai Mel Neruppu
₹170₹158மலை மேல் நெருப்பு ( Fire on the Mountain ) 1978 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவல் . கரிக்னானோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தா கவுல் என்ற மூதாட்டியைச் சுற்றி வருகிறது இந்தப் புதினம் . இந்தக் கதாபாத்திரத்தை வெகு லாவகமாகக் கையாண்டுள்ளார் அனிதா தேசாய் நந்தா கவுலின் கொள்ளுப் பேத்தி ராக்காவின் வருகை , அதனால் நந்தா கவுலுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன . நந்தா கவுலின் தோழி ஈலா தாசின் தோற்றம் எளிமையான . சோகமான நகைச்சுவையை உணர்த்துகிறது .அனிதா தேசாய் 1937 இல் பிறந்தவர் . அவருடைய தந்தை வங்காளத்தைச் சேர்ந்தவர் . தாயார் ஜெர்மன் . அனிதா தேசாய் தில்லியில் கல்வி கற்றார் . தெளிவான பகல்போது ‘ . ‘ கட்டுப்பாட்டு நிலையில் ‘ , ‘ விருந்தும் உபவாசமும் ‘ , ‘ மாலை நேர விளையாட்டு ‘ , ‘ கடலோரக் கிராமம் ‘ , ‘ பாம்கார்ட்னரின் பம்பாய் நகரம் ‘ முதலியன இவர் எழுதிய நூல்கள் . சாகித்திய அகாதெமியின் ஆங்கில ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் , இலண்டன் நகரின் இலக்கியத்துக்கான அரசுக் கழகத்தின் சிறப்பு அங்கத்தினராகவும் அவர் பணியாற்றி உள்ளார் .இந்நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ள அசோகமித்திரன் , ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுத்துத் துறையில் சிறந்து விளங்கியவர் . அவரது கதைகளில் ஒரு சிறிய விவரத்தைக்கூட நுட்பமாக , முழுமையாகக் காணமுடியும் . நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார நிலையை , அவர்களின் இயலாமையை மிகையில்லாமல் காட்டியவர் .