Showing 17–28 of 28 results
-
Read more
புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள் / Puthuvai Vattara Naatupurak kathaikal
₹250₹233இலக்கிய உலகில் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த நாட்டுப்புறவியல் இன்று நவீன ஆலயங்களாகக் கருதப்படும் பல்கலைக் கழகங்களில் ‘ பிரவேசம் ‘ செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது . முக்கியத்துவம் பெற்றுள்ளது .எனினும் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இத்துறையில் நிகழ்த்த வேண்டிய சாதனைகள் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளன . நாட்டுப்புறக் கதைகள் , பாடல்கள் போன்றவற்றின் தொகுப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறினால்தான் இத்துறையில் மேலும் மேலும் ஆய்வுகள் செழிக்கமுடியும் .புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்தபோது பாக்டர் கி.வேங்கடசுப்பிரமணியம் புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைத்தொகுப்புத் திட்டத்திற்கு கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணனை இயக்குநராக அமரச் செய்தார் . தமிழ்ப் படைப்புகளில் நாட்டுப்புற நறுமணம் கமழப் பெரிதும் காரணமாகவிருக்கும் கி.ரா. பல்கலைக்கழகத் தமிழியல் துறையினர் உதவியுடன் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளில் புதுவை வட்டாரத்தில் வழங்கும் கதைகளைச் சிறப்புறத் தொகுத்து வகைப்படுத்தி தமக்கேயுரிய பாங்கில் எழுத்து வடிவில் கொண்டு வந்துள்ளார் .153 கதைகளுடன் பதிப்பாசிரியரின் குறிப்புரையும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் அமைந்த பதிப்புரையும் கொண்ட இந்நூல் பலவகையில் மற்ற தொகுப்புக்களிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது என்பதை ஆர்வலர்கள் எளிதில் கண்டுகொள்ள இயலும் . -
Read more
பெண் கதை எனும் பெருங்கதை / Penn Kathai Ennum Peruinkathai
₹90₹84ஆண்களுக்கு எல்லைகள் வகுத்து , தங்களுக்கான உலகை நிறுவிக் கொண்ட பெண்கள் . ஆண்கள் பகிஷ்கரிக்கப்பட்ட அந்தரங்க உலகம் . அந்த உலகின் ஆளுமைகள் . அதன் அரவணைப்புகள் , அளித்த அடைக்கலங்கள் . வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான பாட்டிமார்கள் , கதை கதையாக விரிந்த பாடங்கள் . ‘ பெண்கதை எனும் பெருங்கதை ‘ பலரும் அறியாத , ருசிகரமான , பெண்ணின் புதிய கோலங்களை , கோணங்களை அளிக்கிறது .பெரும் இலக்கிய ஆளுமை கி.ராஜநாராயணன் அவர்களின் இந்தத் தொகுப்பு , ஏற்கெனவே வெளிவந்த அவரது தனித்துவ முத்திரை பதித்த வட்டார வாழ்வின் , வழக்கின் , குறிப்பாக அவர் கண்டெடுத்த பெண் கதைகளின் தொடர்ச்சி .டாக்டர் வே.வசந்தி தேவி ,மேனாள் துணைவேந்தர் . -
Read more
பெண் கதைகள் / Penn Kathaikal
₹175₹163இத்தொகுதியில் உள்ள “ பெண் ” கதைகள் இப்பவும் படிக்க சுவாரச்சியமாக இருக்கின்றன .ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்துவிட்டுப் போகட்டும் . பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா ?ஆட்டுக் கறியின்போது அடித்துக் கொள்கிறதும் கோழிக் கறியின்போது கூடிக் கொள்கிறதும் சகஜம்தான் .வரகரிசி வேகும் நேரம்தான்புருசம் பொண்டாட்டிச் சண்டை என்கிறது ஒரு சொலவம் .‘ பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா ” என்கிறான் நம்மவன் !.சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்து விட்டோமே நாம் . என்னகி . ராஜநாராயணன் -
Read more
பெண்மணம் / Pennmanam
₹230₹214பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும் , அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகையதொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் . தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றின் விளைச்சலான இக்கதைகள் மூலம் தங்களைப் பற்றிய சொல்லாடலைப் பெருக்கி தங்கள் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமையும் எனலாம் . இக்கதைகளுக்குத் தலைப்பாக ஒன்றை கி.ரா. தந்துள்ளார் அந்தக் கதைகளுக்கும் தலைப்பிற்கும் இடையே உள்ள உறவுகள் கி.ரா. பார்வையில் அமைந்தவை .டாக்டர் க.பஞ்சாங்கம்