Showing all 2 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இல்லுமினாட்டி / Illuminati

    155 144
    நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம் . ஆனால் உண்மை அதுவல்ல . உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர் . காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர் . அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம் . ஆம் , அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள் .
    நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம் . ஆனால் உண்மை முற்றிலும் வேறானது . ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள் . நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் .
    அதிகாரவர்க்கம் , ஆட்சியாளர்கள் , தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன . திடீரென ஒரு நாடு திவால் அடையலாம் . இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம் . ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம் . ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம் . ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம் . இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க அழிவுபூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா !
    பீடிகை போதும் . பெயரைச் சொல்லிவிடலாம் .
    இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர் .
    இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின் , நிகழ்வுகளின் வழியே காட்சிப்படுத்தும் புத்தகம் இது ,
    நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள் , நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது . அதன் பொருள் , உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்கள் என்பதல்ல , கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்துக்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம் .
    பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம் . கூடவே , பக்குவத்தையும் கொடுக்கும் ! வாசித்துப் பாருங்கள் !
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மாண்புமிகு விவசாயிகள் / Manbumigu Vivasayigal

    177 165
    உழவுத் தொழில் நொடிந்த நிலையில் , ஒரு பிரதேசமே கைவிடப்பட்ட சூழலில் , செயற்கையான உரங்களாலும் , பூச்சிக் கொல்லிகளாலும் மண்ணே மலடான தருணத்தில் – ஒரு மீட்பர் போல , ஒரு தேவதை போலத் தோன்றி , அந்தப் பிரதேசத்துக்கே புத்துயிர் கொடுத்த உழவர்களின் அசாதாரணக் கதைகளே இந்தப் புத்தகம் .
    இந்த மண் மீதும் , மனிதர்கள் மீதும் கொண்ட அக்கறையினால் இயற்கை விவசாயத்தை நம்பிக் களமிறங்கி , அவமானங்களைப் புறக்கணித்து , தோல்விகளை விழுங்கி நிமிர்ந்து , நின்று போராடி , பசுமையை மீட்டெடுத்து வென்ற எளிய , வலிய மனிதர்கள்தாம் இவர்கள் . தாம் இயங்கும் சமூகத்தையும் இயற்கை விவசாயத்தின் வழியில் கைதூக்கிவிட்ட வயக்காட்டுப் போராளிகள் . நம் மண்ணில் மட்டுமல்ல – தேசங்கள் தோறும் , கண்டங்கள் தோறும் அர்ப்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு இயற்கை விவசாயிகளை இங்கே சந்திக்கலாம் .
    இயற்கையோடு இணைந்த இவர்களது வெற்றி , பசுமையான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் மிச்சம் வைக்கிறது . நாளைக்கும் நம் சந்ததிக்கும் நல்ல , ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்ற ஆசையைத் தக்க வைக்கிறது . மாற்றம் , நம் மனத்தில் இருந்துதான் உண்டாக வேண்டும் என்ற பேருண்மையை உரக்கச் சொல்கிறது .
    இந்த மாண்புமிகு விவசாயிகள் நம் மனத்தில் உண்டாக்கப் போகும் மாற்றம் மகத்தானது !