Showing 33–48 of 50 results
-
Read more
மானாவாரி மனிதர்கள் / Manavari Manithargal
₹150₹140இன்றைய அறிவியல் வளர்ச்சியில் , பிரபஞ்சவெளியில் பிற கோள்களை ஆராய்ச்சி செய்கிறான் மனிதன் . இந்த பூமியில் மணிதகுணம் வாழ்வதற்குத் தண்ணீரும் , உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட இது பொருத்தும் சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக் கருத்தை கொங்கு கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய இலக்கியத்திற்கும் மகிமை சேர்த்துள்ளார் சூர்யகாந்தன் , இந்த மானாவாரி மனிதர்களில் இவர் கூறியுள்ள தண்ணீர்ப் பிரச்சனை அழுத்தமான குறியீடாகவே வலிமை பெறுகிறது . மனிதர்களின் அனைத்துப் போராட்டங்களையும் எதிரொலிக்கும் அர்த்தமாகவும் ஆகிவிடுகிறது .. மூக்காலத்தையும் கடந்து எக்காலத்திலும் நிலைபெறும் இலக்கியமாக இந்தப் படைப்பு உயர்வதற்கு இதுவே சாத்தியமாகிறது . அமரர் அகிலன் நினைவு நாவல் விருதும் , ஆண்டின் சிறந்த நாயலுக்கான இலக்கியச் சிந்தனை விருதும் இதற்கு எளிய அங்கீகாரங்களே . மக்கள் இலக்கியத்தில் இந்த நாவல் மணிவிளக்காக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்பதே மகத்தான விருது .
-
Read more
மேய்ப்பர்கள் / Meypparkal
₹300₹279படைப்பாளிகளின் அணுக்கச் சூடில்லாமல் , பவா , சில மணி நேரங்களை கூட உங்களால் கடந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை .அணுக்கச் சூட்டின் தேடுதலும் , அந்த அனுபவம் தந்த உன்மத்தமும் தான் இந்நூல் முழுதும் நிரம்பியிருக்கிறது .“ ஒரு நாகரீக சமூகத்தின் முதன்மை சிம்மாசனம் எப்போதும் கலைஞனுக்குதான் ” எனும் வரிகளில் கலைஞனின் ராஜபாட்டையின் விஸ்தாரம் என்னவென்று சொல்கிறார் பவா .உன்மத்தம் மட்டுமல்ல .. நெகிழ்ந்தோ , கனிந்தோ , மருகியோ , துக்கித்தோ , மௌனித்தோ இருக்கும் ஏதோவொரு மனவெளியில் இந்த எழுத்து நம்மை நிறுத்தும் .காயத்ரி ( USA ) -
Read more
ராஜவனம் / Rajavanam
₹70₹65வாழ்வின் சுவாரஸ்யமே , தெரியாததைத் தெரிந்து கொள்வதும் , புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே ! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது . இந்த உலகமே ஒரு குடும்பம் ; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர் , வனம் , நதி , மலையோடு விலங்குகள் , மரம் , செடி கொடிகள் , பறவை , பட்சிகளென தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து , அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது . இப்பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய்த் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும் .ஆர் . என் . ஜோ டி குருஸ் -
Read more
விலகி ஓடிய கேமிரா / Vilaki Odiya Camera
₹120₹112‘ விலகி ஓடிய கேமரா ‘ புத்தகம் முழுக்க ஒரு பெருவாழ்வின் நதி நீர் சுழித்து சுழித்து ஓடுகிறது . இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு , பரிசுத்தமாய்ப் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்வனுபவங்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறது . அனுபவம்தான் நமக்கு வாழ்வியல் நெறியை , அதன் சூட்சுமங்களை அள்ளிக் கொடுக்கிறது . அதுமட்டும்தான் இப்புத்தகப் பக்கமெங்கும் பரவிக்கிடக்கும் உண்மை .
-
Read more
வெள்ளையானை / Vellaiyyaanai
₹500₹465உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம் . ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் . மறு பக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே . நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும் .இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது . எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் .ஜெயமோகன்