Showing all 7 results
-
Read more
இது கறுப்பர்களின் காலம் / Idhu Karuppargalin Kaalam
₹125₹116நாங்கள் இன்னும் தொடப்படாத முரசுகளை செவிப்பறை கிழிய அடித்து நொறுக்குவோம் . காலத்தின் இருட்குகை சுவர்களில் எங்கள் சொற்களைப் பொறிப்போம் . வரலாற்றினுள் எங்களை நாங்களே எழுதுவோம்
-
Read more
எண்பதுகளின் தமிழ் சினிமா / Enbathugalin Tamil Cinema
₹150₹140தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முக்கிய காலக்கட்டமான 1980 களை மையமாக்கி முன்னும் பின்னுமாகச் சென்று விரிந்த பின்புலத்திலிருந்து முக்கியமான அம்சங்களை இனங்கண்டு ஆராய்கிறது இந்நூல் . மரபான நம்பிக்கைகளும் நவீனகால மாற்றங்களும் சந்தித்தபோது சமூகப்பரப்பில் ஏற்பட்ட ஊடாட்டங்களை திரைப்படங்கள் தனக்குரிய வணிகச்சட்டத்திற்குட்பட்டு பிரதிபலித்ததை அதன் ` உள்மெய் ‘ யிலிருந்து விலக்கி எடுத்து இந்நூல் விவாதிக்கிறது . தமிழ் சினிமாக்களில் சாதியும் ஒடுக்கப்பட்டோரும் புறக்கணிக்கப்பட்டனர் என்ற இதுநாள் வரையிலான பார்வையை சற்றே தலைகீழாக்கி தமிழ்ச்சினிமா கதையாடல் எப்போதும் ஒடுக்கப்பட்டோரையே சார்ந்து இயங்கி வந்திருக்கிறது என்று இந்நூல் வாதிடுகிறது .
-
Read more
ஓணம் பண்டிகை பௌத்தப் பண்பாட்டு வரலாறு / Onam Pandigai Boutha Panpattu Varalaru
₹175₹163ஓணம் பண்டிகையை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் அதன்மூலம் பண்பாடு தொடர்பான சுவாரஸ்யமான பக்கங்களை நம்முன் விரிக்கிறது . இந்து பண்டிகையாக அறியப்படும் ஓணம் பண்டிகையின் அடிப்படையாக பௌத்தமே இருந்தது என்று வாதிட்டு இன்றைக்கு புறநிலையில் திரிந்திருந்தாலும் உள்மெய்யாக பௌத்த அடிப்படையே உறைந்து நிற்கிறது என்று நிறுவுகிறது . கேரளத்தில் ஓணம் நடக்கிற நாளிலேயே தமிழகக் கோயில்களின் விழாக்களிலும் சடங்குகளிலும் வெளிப்படும் தொடர்புகளையும் இந்நூல் எடுத்து வைத்துள்ளது . பண்பாட்டை ‘ உள்மெய்யாக வாசித்தல் என்னும் பண்டிதர் அயோத்திதாசரின் அணுகுமுறையை கையாண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது .
-
Read more
விசாவுக்காக காத்திருக்கிறேன் / Visavukkaga Kaathirukiren
₹70₹65இவை டாக்டர்.அம்பேத்கரின் சொந்தக் கையெழுத்தில் வரையப்பட்ட நினைவலைகள் . மக்கள் கல்விக் கழகத்தின் சேகரிப்பில் இருந்த இக்குறிப்புகள் 19 மார்ச் , 1990 – இல் சிறு நூலாகக் கழகத்தால் வெளியிடப்பட்டது . ‘– தொகுப்பாசிரியர்