திராவிடம் , தமிழ் உணர்வு போன்ற லட்சியங்கள் எப்போதும் சுடர்விட்டு எரியும் தீபங்கள் . அவை எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமானவை . தமிழன் என்பது எப்படி நிரந்தரமானதோ ,. அதைப் போன்றதுதான் திராவிடமும் தமிழ் உணர்வும் . தாய்ப் பாசத்துக்கு எப்படி கால நிர்ணயம் இல்லையோ , அதைப் போல் தமிழ் உணர்வுக்கும் கால நிர்ணயம் கிடையாது !
இலக்கிய விமர்சனம் , மொழிபெயர்ப்பு , சிறுகதை , கவிதை , நாவல் , பதிப்பு என்று பன்முகம் கொண்டவர் சி.மோகன் . தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் அவர் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி ‘ இந்து தமிழ் ‘ நாளிதழில் எழுதிய தொடர் ‘ நடைவழி நினைவுகள் ‘ . தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும் , அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள் . வாசகரோடு ஒரு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது .
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் சோசலிஸ்ட் அமைப்பை உருவாக்கி பொதுவாழ்க்கையில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டவர் கே.சந்துரு . தொழிற்சங்கத் தலைவர் வி.பி.சிந்தனின் வழிகாட்டலில் இடதுசாரி இயக்கத்தோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர் . சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது , தொழிலாளர் வழக்கறிஞராகப் உரிமைகளைப் பாதுகாக்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர் . சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பு வகித்த ஏழாண்டு காலத்தில் 96000 வழக்குகளை விரைந்து முடிவுசெய்து காலதாமதத்தைத் தவிர்த்த பெருமைக்குரியவர் . தனது பதவிக் காலத்தில் காலனியாதிக்க மரபுகளை உறுதியாகத் தவிர்த்து முன்னுதாரணத்தை உருவாக்கியவர் சந்துரு சட்டம் மற்றும் நீதித் துறை தொடர்பாக அவர் சமீபத்தில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது .