Showing 17–32 of 142 results
-
Add to cart
இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் / Ilaiyaraja: Isaiyin Thathuvamum Azhagiyalum
₹120₹112வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்னாடக வர்ணமெட்டுகளைப் போல மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ணமெட்டுகள் ஏராளமாக உண்டு . அவைகளைத் தேடித் தேடி கவனம் செய்து மனசில் வாங்கி பதிவுசெய்துகொண்ட ஞானியரில் மகாஞானி நம்முடைய இளையராஜா அவர்கள் . நமது மண்ணிலிருந்து முளைத்தவர் அவர்கி.ராஜநாராயணன்ஒரு சினிமா இசையமைப்பாளராகவும் அதற்கு மேலும் ஏதோ ஒருத்தர் இளையராஜா என நான் நினைத்திருந்த எண்ணத்தை பிரேம் – ரமேஷின் கட்டுரை உடைத்தெறிந்தது . இந்தப் புத்தகத்தில் ஏதாவது சிறப்பு இருக்கிறதென்றால் அது பிரேம் ( மேஷ் இருவரும் உருவாக்கியதனால் வந்ததுதான் . எந்த ஒரு திரைப்படத்தின் பெயரையோ , ஒரு பாடலையோ குறிப்பிடாமல் இந்தப் புத்தகம் சிறப்புப் பெறுவதாக நினைக்கிறேன் .இளையராஜா என்கிற ஒரு ஆள் இல்லாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் . இந்தக் கேள்வியை பார்க்கிற நண்பர்களிட மெல்லாம் கேட்டுவிட்டேன் . பதிலே இல்லை . –தங்கர்பச்சான் -
Add to cart
உயிர்ச்சொல் / Uyirchol
₹200₹186உயிர்ச்சொல் ‘ நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது . ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து , வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி , அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது . பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது . உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது . கபிலன் வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இந்தப் படைப்பு . ‘ இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது ‘ என்பது கபிலனின் கருத்து .கவிதை , சிறுகதை , நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும் , நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன் வைரமுத்துவை பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம் .‘ உயிர்ச்சொல் கபிலன் வைரமுத்துவின் இரண்டாவது நாவல் . -
Add to cart
என் பெயர் நுஜூத் / I Am Nujood
₹180₹1671998 ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜூத் . 2008 ஆம் ஆண்டு , குளிர் மிகுந்த சாம்பல் நிறமான ஒரு மாலை வேளையில் அவளிடம் , ‘ உன் வயதைவிட மூன்று மடங்கு மூத்தவரான ஒருவரை திருமணம் செய்யப் போகிறாய் ‘ என தந்தை சொல் கிறார் . ஈர்க்கத்தக்க , விளையாட்டுத்தனமான அவளின் சிரிப்பு திடீரென கசப்பான கண்ணீராக வடிந்தது . ஒட்டுமொத்த உலகமும் அவளின் தோள்மேல் இறங்கியது போன்று இருந்தது . சில நாட்களுக்குப் பிறகு அவசரமாக திருமணம் நடந்தது . சிறுமி நுஜூத் , தனது எல்லா வலிமையையும் சேகரித்து அவளுடைய பரிதாபமான விதியிலிருந்து தப்பிக்க முயன்றாள் …– டெல்ஃபின் மினோவி ‘பெண் ஏன் அடிமையானாள் ? ‘ என்று பெரியார் எழுதிய நூலுடன் , பெண்களுக்கு அன்பளிக்கத் தகுதியான ஒரு நூல் இது . விடுதலை முழக்கங்களை விட பாதிக்கப்பட்டு சுய எழுச்சியால் மீண்டவர்களின் , விடுதலையடைந்தவர்களின் குரல் களுக்கிருக்கும் வலிமை எவரையும் ஆழமாகத் தொடக்கூடியது .-ஸர்மிளா ஸெய்யித் -
Read more
எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன் / M.R.Radha:Kalathin Kalaignan
₹250₹233ஒரு திரைக்கலைஞனின் வாழ்வனுபவம் என்பது , பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ , அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்களை ஆதாரபூர்வமாக அணுகுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்களையோ கொண்டிருப்பதோடு எம்.ஆர்.ராதாவை நாட்டின் முடிந்துவிடுகிறது . வாசிப்பது ஆனால் என்பது , தமிழ் அரைநூற்றாண்டுகால அரசியல் வரலாறாகவும் , அரசியல் மாற்றங்களின் சாட்சியங்களாகவும் மேடைக்கலைஞன் இருக்கிறது . இதுதான் திரைக்கலைஞன் என்பதிலிருந்து அவரை மக்கள் கலைஞனாக தனித்துவமாக்கிக் காட்டுகிறது . மூடப் பழக்கவழங்கங்களால் மூழ்கிக் கிடந்த மக்களை மீட்க , தான் சார்ந்த கலையையே ஓர் ஆயுதமாகவும் , கொட்டகைகளையே போராட்டக்களமாகவும் மாற்றிக்கொண்டவர் எம்.ஆர்.ராதா . அப்படிப்பட்ட ஒரு சமூகப் போராட்டக் களத்தையும் , அதில் ஒரு கலைஞனின் பங்களிப்பையும் பத்திரிகையாளர் மணா இந்நூல் மூலம் சிறப்பாக தொகுத்து கொடுத்துள்ளார்-பதிப்பாளார்