நாம் ஒரு மனிதனை பாவி என்றும் , மேலும் இன்னொரு மனிதனை புண்ணியவான் என்றும் கூறுகிறோம் . அதன் அர்த்தம் , எல்லாமே மனிதனின் கைகளில்தான் உள்ளது என்ற உணர்வின் அடிப்படையில்தான் ஒருவன் விரும்பினால் , அவனால் நல்ல கர்மாக்களை ( யுண்ணியத்தைச் செய்யமுடியும் . மேலும் அவன் விரும்பினால் , பாவங்களையும் செய்யமுடியும் . நீ பாவங்களைச் செய்யும்போது , அது உனது கைகளில் உள்ளது என்று எப்போதாவது நினைத்திருக்கிறாயா , நீ விரும்பினால் உன்னால் அதைத் தவிர்க்க முடியுமா ? அது உனது கைகளில் இருந்தால் , ஏன் உன்னால் அதை நிறுத்தமுடியவில்லை ? நீ கோபமாக இருக்கும்போது , அந்த நேரத்தில் நீ கோபப்படாமல் இருப்பது உனது கைகளில் உள்ளது என்பது உனக்குத் தெரியுமா ?
இது என்னுடைய பார்வை இல்லை . ஒரு மனிதன் தன்னுணர்வின்றி இருந்தால் , அவன் பாவங்களைச் செய்கிறான் . தன்னுணர்வின்றி இருக்கும்போது இயற்கையாகவே பாவங்கள் நிகழ்கின்றன . யாரும் பாவங்களைச் செய்வதில்லை . தன்னுணர்வின்றி இருப்பதாலேயே பாவங்கள் நடைபெறுகின்றன . அதனால்தான் ஒரு பாவியின் மேல் என் மனதில் எந்தக் கண்டனமும் இருப்பதில்லை