Showing 1–16 of 34 results

  • SAVE 7%

    ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945) / Frenchiyar Aatchiyil Pudhucherry Nadum Panpadum (1815-1945)

    360 335

    பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கிழ்த்திசைக் காலனியாக்கப் பயணம் , பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது . தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது . அதற்கேற்பட மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சிகள் தொடங்கின . ஒருபுறம் மக்களையும் நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது . மற்றொருபுறம் கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவது என்ற இரு வழிகளில் பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்தது . ஆனால் எதிலும் முழுமையடையாத இந்த அணுகுமுறை , இரட்டைக்கிளவியாய் அமைந்துவிட்டதால் ஃபிரான்சின் நோக்கம் நிறைவேறாமல் போனது . அந்தக் காலகட்டத்தில் , புதுச்சேரியிலிருந்து அடிமைகளாக அயலகம் ஏற்றுமதியான அடித்தட்டுமக்கள் , தொடக்கக் காலங்களில் பட்ட துயரங்களையும் , அதற்கு நேர்மாறாக ஃபிரஞ்சு இராணுவப் போர்வீரர்களாகச் சென்றோர் பெற்ற ஏற்றங்களையும் சொந்த மண்ணில் உள்ளூர்க் குடிமக்கள் , தங்களின் வாழ்வுரிமைக்கும் வாக்குரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும் , பெருந்தொற்றாய் வந்து தாக்கிய வைசூரியையும் பெருமழையாய் , பஞ்சமாய்த் தாக்கிய பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியாமல் பாமர மக்கள் பட்ட துன்பங்களையும் , வழிவழியாய் வந்த வழக்காறுகள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மங்கியும் மடிந்தும் போனதையும் , ஆண்டவர்கள் அகன்றாலும் இன்றும் காண்குறும் அவர்தம் வரலாற்று வடுக்களையும் பற்றிய பின்னணித் தகவல்களின் திரட்டே இந்நூல் .

    Add to cart
  • SAVE 7%

    ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815) / Frenchiyar Kaala Pudhucherry Mannum Makkalum (1674-1815)

    390 363

    பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் , அயலகத்தில் வணிக முயற்சிகள் , அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல் , ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம் , பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது . இந்தியச் சிற்றரசர்களை அணி சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில் , இடையில் சில வெற்றிகள் கிடைத்தாலும் , மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் தோல்வியே மிஞ்சியது . இறுதியில் வென்றவர் ஆங்கிலேயரே . ஐதர் அலி , திப்பு கல்தானுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற முடியவில்லை ; பல இந்தியப் போர்களின் முடிவில் வெற்றியின் விளிம்பில் ஃபிரான்சு நின்றபோதிலும் , ஐரோப்பியப் போர்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்களால் வெற்றிவாய்ப்புகள் கை நழுவிப்போயின . இறுதியில் ஆங்கிலேயரால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டபோது , பாரிஸ் ஒப்பந்தம் காரணமாகவே ஃபிரஞ்சிந்தியப் பகுதிகள் ஃபிரான்சுக்குத் திரும்பக் கிடைத்தன . ஆயினும் , புதுச்சேரிப் காலனி வேட்டை முற்றுப்பெற்றது . பிரதேசத்தைத் துண்டுதுண்டாக்கியே திருப்பித் தந்தனர் , அத்துடன் ஃபிரான்சின் கத்தோலிக்கக் கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் , ஆட்சியரின் துணையுடன் இந்தியச் மந்தமாகவே தொடர்ந்தது . சமூகத்தின்மீது தொடுத்த உளவியல் , உடலியல் தாக்குதல்களால் , மதமாற்றம் சற்று இந்த நெடிய ஆதிக்கப்போரில் இரு தரப்பிலும் , கையாண்ட உத்திகள் , கண்ட போர்க்களங்கள் , பாடைக் காய்களாக உருட்டப்பட்ட இந்தியச் சிற்றரசர்களின் இந்நூல் பயணிக்கிறது . இயலாமை , போர்க்காலங்களில் பாமர மக்கள் அனுபவித்த கொடுமைகள் , அவர்களை ஆட்டிப்படைத்த ஐரோப்பிய ஆளுமைகளின் சதிராட்டங்களின் ஊடாக இந்நூல் பயணிக்கிறது.

    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792) / Irandaam Veeranayakkar Naatkurippu (1778-1792)

    395 367
    பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792 வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘ இரண்டாவது நயினார் ‘ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு – சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு , ஆந்திரம் , கர்நாடகம் , மகாராட்டிரம் , வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு , பகை , பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது .
    ஐதர் அலி ஆட்சி , திப்பு சுல்தான் ஆட்சி , பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம் , புதுவை மக்களின் எழுச்சி , தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு , ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘ இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு ‘ .
    தி.நாச்சிமுத்து
    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    சாதிக்குப் பாதி நாளா ? / Caatikkup Paati Naalaa ?

    220 205

    ‘ குலக்கல்வித் திட்டம் ‘ என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது . கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம் . இத்திட்டம் எவ்வாறு உருவானது , எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது , இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒலித்த குரல்கள் எவை , பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் எவ்வாறு இத்திட்டம் கைவிடப்பட்டது என்பதை எல்லாம் ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் , விறுவிறுப்பான நடையில் இந்நூல் ஆராய்கிறது . குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியின் பின்புலத்தை விளக்கிப் பதிப்பாசிரியர் ஆ . இரா . வேங்கடாசலபதி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார் . நவீன தமிழகத்தின் சமூக – அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது .

    Read more
  • SAVE 7%
  • SAVE 7%

    சேரன்மாதேவி / Ceeranmaateevi

    375 349

    சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும் . குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன் . ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று ( வ.வே.சு. ) ஐயர் கூறினார் . இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ . வி . ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப்போனோம் .
    . டாக்டர் வரதராஜுலு நாயுடு ( 1924 )
    வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும் , ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல . வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும் , கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும் .
    பெரியார் ( 1925 )
    இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாதார் இயக்கமானது முறுகி எழுவதற்குக் காலம் சமீபித்துவிட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன .
    சொ . முருகப்பா ( 1925 )

    Add to cart
  • SAVE 7%

    ஜெர்மன் தமிழியல் / Jerman Tamizhiyal

    200 186

    தமிழ்மொழி பன்னெடுங்காலமாகத் தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது . அது நவீனமயமாவதற்கு தமிழக சமூகக் கட்டமைப்பில் இடமில்லாத நிலையில் அதை சாத்தியப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள் . ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறிப் பரப்புநர்கள் ஆய்வுக்காகவும் மதப் பிரச்சாரத்திற்காகவும் தொழில்நுட்ப அடிப்படையில் தமிழை நவீனப்படுத்தி பயன்படுத்தினர் . அச்சு இயந்திரங்களின் அறிமுகத்தால் எல்லா நிலைகளிலுமுள்ள மக்களுக்கும் நூல்கள் கிடைக்கப்பெற்று , எல்லோரும் கல்விபெற வழியமைத்தனர் . இது தமிழியல் வரலாற்றின் திருப்புமுனை ; மாபெரும் புரட்சி . அந்த முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையின் அடிப்படைச் சுவடுகளை சுபாஷிணியின் ஆய்வு முதன்மைத் தரவுகளுடன் முன்வைக்கின்றது

    Add to cart
  • SAVE 7%
  • SAVE 7%

    திராவிடச் சான்று / Dravida Chantu

    300 279

    திராவிட உறவுமுறை ‘ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய தாமஸ் டிரவுட்மன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல் . பாஷம் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர் . அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலைக்கழகத்தில் 1968 முதல் 2010 வரை மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய டிரவுட்மன் இப்பொழுது அங்கே தகைசால் பேராசிரியராக விளங்குகிறார் . இவருடைய முக்கிய நூல்கள் : Dravidian Kinship ( 1981 ) ; Lewis Henry Morgan and the Invention of Kinship ( 1987 ) ; Aryans and British India ( 1997 ) ; ed . , The Aryan Debate ( 2005 ) ; Elephants and Kings ( 2015 ) .

    Add to cart
  • SAVE 7%

    திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 / Thirunelveliyum Ezhuchiyum Va.Vu.Si.Yum 1908

    290 270

    1908 மார்ச் 13 . வெள்ளிக்கிழமை . கப்பல் ஒட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர் . தெருவில் இறங்கினர் . கூட்டம் கூடினர் . வேலைநிறுத்தம் செய்தனர் . அரசு சொத்துகளை அழித்தனர் . இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது . துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர் , நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர் . மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு , ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது . அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம் . ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது . இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல் , ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி .

    Add to cart