Showing 17–32 of 34 results
-
Add to cart
தொல்காப்பியமும் அல்-கிதாப்பும் / Tholkaapiyamum Al-kithapum
₹325₹302த.சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொலகாப்பியத்தோடு ஒப்பீடு செய்வதில் ஈடுபாடுடையவா : இந்நூலில் அறிபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல் – கிநாப்பையம் ( கி.பி. 800 ) , தமிழின் முதல் இலக்கணமாக விளங்கும் தொலகாப்பியத்தையும் ( கி.மு. 300 500 ) ஓலியியல் நோக்கில ஓப்பீடுகிறார் . காலம் , இடம் , மொழிக்குடும்பம் என அனைத்திலும் இருவேறு துருவங்களாக விளங்கும் இவ்விகு மரபிலக்கணங்களின் தனித்தன்மைக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவததை , அவற்றிற்குள் உள்ள ஒற்றுமைக்கும் கொடுக்கிறார் . அவ்வோற்றுமைக் கூறுகளின் வழி தமிழுக்கும் அற்புக்கும் உள்ள இலக்கண உறவிற்கான அகச்சான்றுகளைத் தேடுகிறார் , தமிழுக்கும் அற்புக்கும் இடையில் நாம் கண்டடைந்த வாணிப உறவைத் தொடர்ந்து , இலக்கண உறவிற்கான இந்த மொழியியல் தேடுதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது . மொழியியலா ? வரையறுத்துள்ள கிரேக்கம் , இலத்தீன , ஹீபரூ . அற்பு . சீனம் , சமஸ்கிருதம் , தமிழ் என்னும் ஏழு செவ்வியல் இலக்கண மரபுகளுள் சமஸ்கிருத இலக்கண் மரபோடு கூடிய தமிழ் இலக்கண ஒப்பாய்வுக்குப் பின் , பிறிதொரு செவ்வியல் இலக்கண மரபோடு ஒப்பீட்டு ஆயும் முதலாவது நூல் என்ற பெருமை ‘ தொல்காப்பியமும் அல – கிநாட்டம் ‘ என்னும் இந்நூலுக்கு உண்டு .
-
Add to cart
பாரதியும் காந்தியும் / Bharathiyum Gandhiyum
₹250₹233மகாத்மாவும் மகாகவியும் 1919 இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர் . காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி , கட்டுரை , கவிதை , கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார் . தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் முயற்சிகளை அறிந்திருந்த காந்தி , பாரதி மறைவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ‘ யங் இந்தியா ‘ , ‘ நவஜீவன் ‘ இதழ்களில் பாரதியைப் பற்றி எழுதியிருக்கின்றார் ; பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார் . பாரதி பெயரைத் தம் கைப்படத் தமிழில் எழுதிப் போற்றியிருக்கிறார் … இந்த வரலாற்றை விரிவாகத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்திற்குக் கையளிக்கின்றது இந்நூல் .
-
Add to cart
மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் / Maamallapuram Pulikkukayum Kirushna Mantapamum
₹225₹209உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு மாமல்லபுரம் சாளுவன் குப்பத்துப் புலிக்குகைஎத்தனையோ விளக்கங்களைப் பெற்றுள்ள இச்சின்னம் , சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக்கோயில் என்பதையும்கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து கண்ணன் ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த சிற்பத்தொகுதிசங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் என்பதையும் நிறுவுகிறது இந்நூல் . -
Add to cart
மெட்ராஸ் 1726 / Medraas 1726
₹250₹233காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன . அரசியல் , வணிகம் , வாழ்வியல் , சமயம் , சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன . இந்த நூல் 18 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு , சமூக அமைப்பு , ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது . மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள் , தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள் , கடைவீதிகள் , ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள் , ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு , பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் , உள்ளூர் மக்களைப்பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றியும் பேசுகிறது .பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார் . கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன . இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கின்றது . -
Add to cart
வ.உ.சி.யும் பாரதியும் / Va.U.Si.Yum Bharathiyum
₹240₹223இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வட்சியம் பாரதியும் . இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெருசபை போராட்டக் கட்டமான சுநேசி இயக்கத்தின் சூழந்தைவர் ஒே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகயே வெளிச்சத்திற்கு வந்தவர்கள் , 1800 இல் தொடங்கி மறையம்வரை இருவருக்குமிடையே ஆவணப்படுத்துகிறது இந்நூல் . உர்ச்சிப்பாங்கானதொரு நட்பு வளர்ந்து செழித்தது . அந்தக் காவிய பை பாரதியைப் பற்றி உட்.சி , எழுதிய நினைவுக் குறிப்புகளையம் , வட்சியைப் பற்றிப் பாரதி பல்வேறு சமயங்களில் எழுதிய கட்டுரைகள் , கவிதைகள் , நூல் மதிப்புரைகள் , கருத்துப்படங்கள் , விளம்பாங்கள் முதலானவற்றையும் இந்நூல் கொண்டுள்ளது . தமிழ் எழுத்து , சீர்திருக்கம் பற்றி வசிக்கும் பாரதிக்கும் இடையே நடைபெற்ற டானதொரு விவாதமும் முழுமையாக நூலாக்கம் பெறுகின்றது . இருவரின் நட்பையும் , ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன . அக்கால் வரணற்றையும் ஒருங்கே விளக்ரிக்காட்டும் வேறு பலட இவற்றை நேர்த்தியாகத் தேடித தொகுத்துள்ள ஆ.இரா.வேங்கடாசலபதி இவற்றின் பின்னணியை விளக்கும் பதிப்புரையை எழுதியுள்ளார் ,
-
Add to cart
வேலூர்ப் புரட்சி 1806 / Vellore Puratchi 1806
₹325₹3021806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி . வேலூர்க் கோட்டை . ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர் . கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல் நீடித்தது . பின்னர் நடந்த கடும் மோதலில் எண்ணற்ற இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் . தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரை ஆங்கிலப் படையினர் விரட்டிக் கொன்றனர் . கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதிமன்றம் விசாரித்துத் தண்டித்தது . 1806 இல் நடந்த இந்நிகழ்வை வேலூர்ப் படுகொலை , வேலூர்க் கலகம் , வேலூர் எழுச்சி , வேலூர்க் கிளர்ச்சி , வேலூர்ப் புரட்சி எனப் பலவாறு வரலாற்றறிஞர்கள் வர்ணித்துள்ளனர் . வேலூர்க் கிளர்ச்சிக்கான காரணங்கள் , நடந்த நிகழ்வுகள் , நிகழ்வுகளுக்குப்பின் கம்பெனி அரசு எடுத்த நடவடிக்கைகள் , அவற்றின் விளைவுகள் , முதலானவற்றை இந்நூல் ஆய்வு செய்கிறது . வேலூர் நிகழ்வுகள் எவ்வாறு தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது என்பதையும் விவரிக்கிறது . ‘ வேலூர்ப் புரட்சி ‘ முதல் இந்தியச் சுதந்திரப் போராகக் கருதப்படும் 1857 ஆம் ஆண்டின் இந்நூல் நிறுவுகிறது . பெரும் கிளர்ச்சிக்குக் கட்டியங்கூறுவதையும் பிரிட்டிஷ் நூலகம் ( லண்டன் ) , ஸ்காட்லாந்து தேசிய ஆவணக்காப்பகம் ( எடின்பரோ ) , தமிழ்நாடு ஆவணக்காப்பகம் , இந்திய தேசிய ஆவணக்காப்பகம் முதலானவற்றிலிருந்து திரட்டிய ஆவணங்களிலிருந்து இந்தியக் கண்ணோட்டத்தில் இந்நூலை எழுதியுள்ளார் கா.அ. மணிக்குமார் .