Showing 33–48 of 239 results

  • SAVE 7%
    Add to cart

    எது நிற்கும் ? / Etu Nirkum ?

    250 233
    தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காதபோதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர் . நாராயணசாமி .
    ‘ பசித்த மானுடம் ‘ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் . மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர் , நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள் .
    தத்துவ விசாரம் , சமூக விமர்சனம் , வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும் , பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று .
    இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு .
    அரவிந்தன்
  • SAVE 7%
    Add to cart

    எனது தேசத்தை மீளப் பெறுகிறேன் / Enadhu Desathai Meela Perugiren

    350 326

    எமது சட்டங்களை விட அவர்களது சட்டங்கள் உயர்வானவை என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . அதனால் நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும் . எங்களுக்காக எமது மூதாதையர் இருக்கின்றார்கள் . வெள்ளைக்காரர்களுக்கு அவ்வாறு யாரும் இல்லை . அதனால்தான் வெள்ளைக்காரர்கள் தங்களில் யாரேனும் செத்துப் போனால் வீட்டை விட்டு எங்கேயாவது தூரமாகக் கொண்டு போய் புதைத்து விடுகிறார்கள் .

  • SAVE 7%
    Add to cart

    எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள் / Em.Vi.Venkatraam Cirukataikal

    1,250 1,163
    நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில் , ‘ மணிக்கொடி ’ முதல் ‘ எழுச்சி ’ வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது . பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின் முப்பத்திரண்டு சிறுகதைகள் , இப்போதுதான் முதல்முறையாக இத்தொகுப்பில் பிரசுரம் பெறுகின்றன .
    எண்ண வெள்ளமாய்ப் பொங்கும் இயல்புணர்வுகளின் பெருங்காடே , இம்முழுத் தொகுப்பு . லௌகீகத்தின் இரைச்சலும் தத்துவத்தின் அமைதியும் பளிச்சிடும் உணர்வோடைக் கதைஞராகவும் , ‘ பரிசோதனை எழுத்தாளராகவும் ’ எம்.வி.வி. அடைந்த கலை வெற்றியின் படைப்பாவணமாகிறது இந்நூல் ,
  • SAVE 7%
    Add to cart

    எரி / Eri

    120 112
  • SAVE 7%
    Add to cart

    ஐந்து நெருப்பு / Ainthu Neruppu

    280 260

    குற்றத்தைச் செய்யவைப்பது என்ன ? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன் . ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனிமனிதனாக உணர்கிறது . தன் நலத்தை . தன் மகிழ்ச்சியை நாடுகிறது . சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது . அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது . தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது . குற்றத்தின் , தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை . அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை . ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்தக் கதைகளில் உள்ளன . அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள் . எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஒரு தாத்தாவும் எருமையும் / Oru Thaththavum Yerumaiyum

    225 209

    ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா , சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுதிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு . அனுபவபூர்வமாக தாமறிந்த மனிதர்களை கதைமாந்தர்களாக்கி உலவ விட்டுள்ள இக்கதைகள் எளிதில் கடக்க இயலாத தன்மையைக் கொண்டவை .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஒரு பறவை சில உயிர்கள் / Oru Paravai Sila Uyirkal

    170 158
  • SAVE 7%
    Add to cart

    ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் / Oru Vaazhkai Sila Sitharalkal

    160 149

    மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன . பழமையான பண்பாட்டு விதிமுறைகள் , புதிய தேவைகள் , திருமணம் , தாய்மை , காதல் , கல்வி , பணி மற்றும் சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச்சூழலில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன . எதிர் பாலினங்களுக்கிடையேயான உறவுமுறைகளை ஆராய்வதோடு வழமையான பண்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தவும் செய்கின்றன . இந்தக் கதைகளினூடாக உருவகப்படும் நவீன அராபியப் பெண்ணின் சித்திரத்தின் வழியே அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் எண்ணப்போக்குகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது .

  • SAVE 7%
    Add to cart

    ஒளி / Oli

    180 167
  • SAVE 7%
    Add to cart

    ஒளிரும் பச்சைக் கண்கள் / Olirum Pachai Kangal

    175 163

    சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர் . இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயனது . இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார் . யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க விடுகிறார் . கதைகளை எழுதவல்லவராக மினிர்கிறார் . மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து தனது கதையலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும் , படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு காட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும் , பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே காாததிக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன் . ‘ ஓளிரும் பிரகாசிக்கட்டும் பச்சைக் கண்கள் புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி . மொழியும் படைப்பாளனும் – அகரமுதல்வன்

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஓந்தி / Oonthi

    140 130
  • SAVE 7%
    Add to cart

    ஓலைப் பட்டாசு / Olaippattasu

    175 163
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கடுவழித்துணை / Kaduvazhithunai

    150 140
    இந்தக் கதைகளில் இடம்பெறும் கிராம மக்களின் வாழ்க்கையும் . கிராமங்களின் நிலப்பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன . நிலம் முக்கியக் கூறாக இருக்கிறது . பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன . விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக இந்தக் கதைகளில் தென்படுகிறது . தெப்பக்குளம் அர்த்தப்படுத்தும் வகையில் சொல்லப்படுகிறது . ஆறு போன்றவை அதன் அர்த்தம் குறித்து சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன . கிணறுகள் பற்றி பல்வேறு சித்தரிப்புகள் கதைகளாக வந்துபோகின்றன .
    -எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்