Showing 417–432 of 466 results
-
Add to cart
நாலுகெட்டு / Naalukettu
₹325₹302– எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘ நாலுகெட்டு ‘ நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது . எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக் காட்டப்படும் முன்னுதாரணப் படைப்பாகவும் ஆய்வுக்குக் கொள்ளப்படும் இலக்கிய ஆவணமாகவும் திகழ்கிறது .அப்புண்ணி என்ற மையப்பாத்திரத்தின் அக , புற சஞ்சாரங்கள்தாம் நாவலின் கதையோட்டம் . மருமக்கள்தாய முறையின் தூல வடிவமான நாலுகெட்டுத் தறவாட்டுக்குள் கூட்டுக் குடும்பத்துக்குள் – நிகழும் உறவு மோதல்களையும் அதிகாரச் சிக்கல்களையும் பின்புலமாகக் கொள்கிறது . அதன் விரிவாக நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டுகிறது . இந்த இயல்புகளால் கேரளத்தின் ஒரு பகுதியின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது .‘ நாலுகெட்டு ‘ சமகால மலையாள நாவல் கலையின் செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது . இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானதுடன் பதினான்கு மொழிகளில் பெயர்க்கவும் பட்டுள்ளது .மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுஃப் -
Add to cart
பதின் / Pathin
₹235₹219ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக்கொள்கிறான் . ரகசியமாக அனுபவிக்கிறான் .உலகம் சிறார்கள் விஷயத்தில் கடுமையாகவே நடந்துகொள்கிறது . மரபான நாவல்களைப் போல சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நாவல் எழுதப்படவில்லை . ஒரே ஆகாசத்தில் எண்ணிக்கையற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்து கொண்டிருப்பதைப்போலச் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கதைகளாக மின்னுகின்றன .தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிறநினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன் . -
Add to cart
பள்ளிகொண்டபுரம் / Pallikontapuram
₹325₹302காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘ பள்ளிகொண்டபுரம் ‘ , நீல . பத்மநாபனின் நாவல் களில் முதன்மையானது என்று சொல்லலாம் . அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் , கேரளத்தின் , திருவனந்தபுரத்தின் நேற்றைய -இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது .” மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புக்களில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித் துள்ளார்கள் . ஆனால் , அவர்களுள் ஒருவராலும் – R.M. இராமன் பிள்ளையாலோ , தகழி சிவசங்கரப் பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை ஆனால் திரு.நீல . பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரி யருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரண தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது ” என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட … நாவல் ‘ பள்ளிகொண்டபுரம் . ‘ -
Add to cart
பார்வையற்றவளின் சந்ததிகள் / The blind lady’s descendants
₹350₹326‘ சமகால இந்திய எழுத்தாளர்களில் மிகச் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர் ‘ஃபோர்ப்ஸ் இந்தியா‘ சலீம் , தன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்காக விரிவான உலகைப் படைப்பவர் … பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல் தன் எழுத்தெனும் நுண்ணிய இழைகளால் வாழ்க்கையை ஒன்றிணைக்கும் சலீமின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘இருண்மையின் நகைச்சுவை , கசப்பாகத் தங்கிவிடும் படைப்பு ‘டெக்கான் க்ரோனிக்கல்‘ நேர்த்தியான படைப்பு ‘தி ஹிந்து