Showing 225–240 of 466 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பாதி ராஜ்யம் / Paathi Raajyam

    180 167
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பார்த்திபன் கனவு / Parthiban Kanavu

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பார்வதி பி.ஏ / Parvathy B.A

    110 102
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பார்வை தொலைத்தவர்கள் / Paarvai Tholaithavarkal

    295 274

    இது ராஜபாட்டை . இரு மருங்கும் உயர உயரமான கட்டடங்கள் . இந்தப் பகுதியில் புழங்கும் கார்கள் விலைமிக்கவை . பெரிய , வசதி அதிகமான கார்கள் . அந்தக் கார்களை இப்போது நிறைய குருடர்கள் , படுத்து உறங்கப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் . பெரிய படகுக்கார் ஒன்று வீடாகவே உருமாற்றம் பெற்றிருந்தது . ஒரு வீட்டுக்குத் திரும்பி வருகிறதை விட காருக்குத் திரும்புவது குருடர்களுக்கு எளிதாய் இருந்தது போல . இதில் இப்போது குடியிருப்பவர்கள் திரும்பி வர வேண்டுமெனில் எப்படி வந்து சேர்வது ? அகதி முகாமில் நாம் சொன்ன வழிமுறை தான் . அங்கே படுக்கைகளுக்கு எண்ணிக்கை வைத்தோம் . இங்கே கார்களை கோடியில் இருந்து ஒண்ணு ரெண்டு என எண்ணியபடி வந்து தன் காரை அடையலாம் . வலது வாடை . 27 வது கார் . நான் வீட்டுக்கு வந்தாச் ! … நாவலிலிருந்து

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பாலிதீன் பைகள் / Paalithin Paikal

    110 102
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பால்கட்டு / Paal Kattu

    280 260
  • Out Of Stock SAVE 8%
    Read more

    பிடி சாம்பல் / Pidi Sambal

    25 23
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பித்தப்பூ / Pithapoo

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பிராப்ளம்ஸ்கி விடுதி / Piraplamski Vituthi

    150 140

    பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்தாவல் , அகதிகள் புகவிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது இப்படைப்பு . சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை . அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது . அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்தாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது . நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது . நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல . படைப்பு என்ற நிலையிலும் ” பிராப்ளம்ஸ்கி விடுதி ‘ முற்றிலும் ஒரு புதிய முயற்சி.

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பிரிவோம் சந்திப்போம் / Pirivom Sandhippom

    500 465
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பிறப்பு / Pirappu

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    புதிய தரிசனங்கள் / Puthiya Dharisanangal

    1,200 1,116
  • Out Of Stock SAVE 7%
    Read more

    புது டில்லி / New Delhi

    180 167
  • Out Of Stock SAVE 7%
    Read more

    புத்தம் வீடு / Puttam Viitu

    190 177
    புத்தம் வீடு ‘ எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல் .
    லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள் . தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் . இறுதியில் இணைகிறார்கள் . முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்துபோகின்றன . இடங்கள் மாறுகின்றன . மனிதர்கள் கடந்து போகிறார்கள் . அவர்கள் உறவாடுகிறார்கள் . காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள் . பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல் கிறார்கள் . குலப்பெருமை பேசுகிறார்கள் . புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள் . காலத்துக்கேற்ப மாறுகிறார்கள் .
    இது லிஸியின் கதை . மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள் . அவளை மையமாகக்கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை . ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள் .
    படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘ புத்தம் வீடு ‘ . கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது . எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    புயலிலே ஒரு தோணி / Puyalilae Oru Tooni

    325 302
    ப . சிங்காரத்தின் ‘ புயலிலே ஒரு தோணி ‘ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது .
    ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல் . வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது . காரணம் அதன் படைப்பு வலு . ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு . இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம் .
    வரலாற்று அடிப்படையிலும் ‘ புயலிலே ஒரு தோணி ‘ தனி இடத்தைப் பெறுகிறது . இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே .
    புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘ புயலிலே ஒரு தோணி ‘ .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    புலிநகக் கொன்றை / Pulinaga Kontrai

    375 349
    தென் ன் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை , படர்ந்து விரிகிறது இந்த நாவலில் . எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றில் பிறந்த சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்து கிறதோ என்ற ஐயம் அந்தக் குடும்பக் கதையின் பின்திரை . படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா பாட்டி தன் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் . சிதறுண்டுபோன , மங்கலான அவளது உலகினுள் அவளது கொள்ளுப் பேரன்களான நம்பியும் கண்ணனும் நுழைகிறார்கள் . மரணத்தின் மடியிலும் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது அவர்களது தேடல் .
    It is epical but minus the constraints of an epic . .
    The Hindu
    Reminds one of Garcia Marquez’s ‘ One Hundred Years of Solitude ‘ .
    . . The Statesman