Showing 257–272 of 466 results
-
SAVE 7%
-
SAVE 7%
மதாம் / Madhaam
₹400₹372இந்திய தாய்க்கும் , ஐரோப்பிய தந்தைக்கும் பிறந்தவர் மதாம் . பிரெஞ்சிந்திய கம்பெனியின் கவர்னராக 12 ஆண்டுகள் ஆட்சிசெய்த துயூப்ளேவின் மனைவி . பிரெஞ்சிந்தியாவின் நிழல் ஆட்சியாளராகக் கோலோச்சியவர் .மதாம் செய்த லஞ்ச லாவண்யங்களாலும் , ஏசுசபை பாதிரிகளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட மதநடவடிக்கைகளாலும் இந்தியா முழுவதையும் பிரெஞ்சுக்காரர்கள் ஆளும் வாய்ப்பு பறிபோனது . ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறியதற்கு மதாம் . ஒருவிதத்தில் காரணமானார் .துயூப்ளே கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்கியதில் தொடங்கி , பதவி பறிபோய் , குற்றவாளியாகப் பிரான்சுக்குக் கப்பலில் ஏற்றப்படும் வரையிலான காலத்தை நாவலாக்கியிருக்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன் -
SAVE 7%
மந்திரவாதியின் சீடன் / Manthiravathiyin seedan
₹350₹326அப்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பவியாகி , அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பளிவெளிகள் , மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயனாமாக இந்த நாவல் விரிகிறது . குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் நாவல் தத்துவ விசாரமும் . பூடகங்களும் குறியீடுகளும் கொண்ட வலைப்பின்னலைத் தனது ஆழத்தில் கொண்டுள்ளது . பனிபடர்ந்த இமயமலையோடு பௌத்த மடாலயங்களின் பின்னணியில் இவால்ட் ஃப்ளிஸர் நெய்யும் புளைவில் அய்ரோப்பியத் தத்துவத்துடன் இந்தியத் தத்துவ மரபும் பௌத்தத் தாந்திரீகமும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடியிருக்கின்றன . தத்துவத்தைப் பொதிந்துவைத்தும் சுவாரஸ்யமாகக் கதைசொல்ல முடியும் என்பதை மெய்ப்பிக்கும் இந்த நாவல் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டதும் இரண்டாம் உலகப்பொருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய நாவலுமாகும் . . ” மத்திரவாதியின் சீடன் ‘ அடிப்படையில் மிக சுவாரஸ்யமான நாவல் , இதில் ஆன்மீகத் தேடல் சாகசப் பயணமாக விரிகிறது . துப்பறியும் நாவலுக்கான வேகத்தோடு மிக ஆழமான கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் பக்கங்கள் துள்ளிக்குதித்தபடி விரைகின்றன . விநோதமான மனிதர்கள் , ஞானிகள் , வியப்பூட்டும் இவற்றோடு இமயத்தின் மடியில் நாவல் அசதாவின் அற்புதமான , சலிப்பேற்படுத்தாத தமிழாக்கத்தில் நகர்ந்து செல்கையில் மயிர்க்கூச்சம் எடுத்து குளிர் குழ்ந்துகொள்கிறது .ஜி- குப்புசாமி
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
மரயானை / Marayanai
₹280₹260நிலம் என்பது பெரும் ஆவல் ஓயாமல் மாறி விழுந்து கொண்டே இருக்கும் சமுதாய , பொருளாதாரப் பேரலைப் பின்னல்களின் நடுவே நிலம் என்பது நங்கூரத்தின் பெரும்பிணைப்பு , நிலம் என்பது கடைசிப் பற்றுக்கோடு சிங்கப்பூர் என்பது ஒற்றைக் குணம் கொண்ட நிலம் என்று பலரும் நினைக்கிறார்கள் . சிறு தீவுதான் . ஆனால் இந்தத் தீவுக்குள் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வட்டாரத்துக்கும் தனிப்பட்ட வரலாறும் . குணமும் , வாசனையும் வண்ணங்களும் இருக்கின்றன . இது சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியைப் பற்றிய , அதில் வாழும் மனிதர்களைப் பற்றிய நாவல் . புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் முதியவரான சுகவனம் இறந்துபோன தனது மனைவி ஜெயக்கொடிக்காக கரும காரியங்களை செய்ய ராமேஸ்வரம் போக நினைக்கிறார் . ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாத சுகவனத்தை ராமேஸ்வரம் என்ற இடம் பயமுறுத்துகிறது . ராமேஸ்வரத்தின் அந்நியம் அவருக்குச் சவாலாய் அமைகிறது . சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியின் வரலாறு . நிலவியல் , சமூக அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களின் ஊடாக ராமேஸ்வரம் சென்று அங் கிருக்கும் கடலில் நூற்றியெட்டு முறை தலைமுழுக . விரும்பும் சிங்கப்பூர்த் தமிழர் ஒருவரின் கதையைச் சொல்கிறது , சித்துராஜ் பொன்ராஜ் – இன் ‘ மரயானை ‘ நாவல் .
-
SAVE 7%
-
SAVE 7%
மற்ற நகரம் / Mattra Nagaram
₹240₹223தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான் . அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது . நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில் , நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொரு வெளி . இந்தப் புலனாகா வெளிக்கான வழிகாட்டிதான் மற்றொரு நகரம் . நமக்கு மிக மிகப் பரிச்சயமானவற்றை நாம் தெளிவாகவே காண்பதில்லை என்பதை நமக்கு நினைவூட்டும் வினோத நகரம் . பயன்பாடுகளும் நோக்கங்களுமாய்ப் பின்னியிருக்கும் வலையில் பொருள்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றன . இந்த வலையை நாம் விலக்கிவைக்கும் பொழுதுதான் பொருள்களைப் புதியனவாய்ப் பார்க்கும் வாய்ப்பிற்குள் நாம் விழித்தெழுகிறோம் .நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உலகங்களுக்கெல்லாம் ப்ராக் நகரின் மற்றொரு நகரம் ஒரு குறியீடாகத் திகழ்கிறது . -
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
மானசரோவர் / Maanacaroovar
₹250₹233பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘ மானசரோவர் ‘ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும் . நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை , போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல் , விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது . பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது . ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக , ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது . இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது . நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது .அரவிந்தன் -
SAVE 7%
மானாவாரி மனிதர்கள் / Manavari Manithargal
₹150₹140இன்றைய அறிவியல் வளர்ச்சியில் , பிரபஞ்சவெளியில் பிற கோள்களை ஆராய்ச்சி செய்கிறான் மனிதன் . இந்த பூமியில் மணிதகுணம் வாழ்வதற்குத் தண்ணீரும் , உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட இது பொருத்தும் சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக் கருத்தை கொங்கு கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய இலக்கியத்திற்கும் மகிமை சேர்த்துள்ளார் சூர்யகாந்தன் , இந்த மானாவாரி மனிதர்களில் இவர் கூறியுள்ள தண்ணீர்ப் பிரச்சனை அழுத்தமான குறியீடாகவே வலிமை பெறுகிறது . மனிதர்களின் அனைத்துப் போராட்டங்களையும் எதிரொலிக்கும் அர்த்தமாகவும் ஆகிவிடுகிறது .. மூக்காலத்தையும் கடந்து எக்காலத்திலும் நிலைபெறும் இலக்கியமாக இந்தப் படைப்பு உயர்வதற்கு இதுவே சாத்தியமாகிறது . அமரர் அகிலன் நினைவு நாவல் விருதும் , ஆண்டின் சிறந்த நாயலுக்கான இலக்கியச் சிந்தனை விருதும் இதற்கு எளிய அங்கீகாரங்களே . மக்கள் இலக்கியத்தில் இந்த நாவல் மணிவிளக்காக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்பதே மகத்தான விருது .
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%