Showing 113–128 of 205 results
-
Read more
மகாபாரதம் / Mahabharatam
₹300₹279பிரபஞ்சனின் ரசனையும் தர்க்க அறிவும் கறாரான மதிப்பாய்வும் சமநிலை கொண்டவை . அபிமன்யுவின் அநியாயமான மரணத்தை எண்ணிக் கசியும் அவர் , பாண்டவர்களின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு குமுறும் அவர் கர்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தலைகுனிகிறார் . பலராலும் வஞ்சிக்கப்பட்ட கர்ணனை அனுதாபத் துடன் பார்க்கிறார் . அதேசமயம் , கர்ணனின் இழிவான செயல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . குந்தி , காந்தாரி , மாத்ரி , சத்யபாமா எனப் பெண்களின் பாத்திரங்கள் மீது கூடுதலான அக்கறை எடுத்துக்கொள்கிறார் . பீஷ்மரின் வாழ்வின் வியர்த்தத்தை வெளிப்படுத்துகிறார் . போர் என்பது பொருளற்ற சாகசம் என்பதை மனம் பதைக்கச் சொல்கிறார் . கிருஷ்ணன் என்னும் மாபெரும் புதிரை மிக நுணுக்கமாக ஆராய்கிறார் . கிருஷ்ணனின் ஆளுமையின் வீச்சையும் ஆழத்தையும் புரியவைக்கிறார் . அர்ச்சுனன் , சாத்யகி , அசுவத்தாமன் , குந்தி , பலராமன் முதலான பல ஆளுமைகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத கோணங்களில் பேசுகிறார் . வியாசரின் படைப்புத் திறனையும் தத்துவப் பார்வையையும் பிரமிப்புடன் பார்க்கிறார் . இந்த நூலைப் படித்தால் மகாபாரதத்தை முதலிலிருந்து கடைசிவரை தெரிந்துகொள்ளலாம் .அரவிந்தன்இந்து தமிழ் நாளிதழ் – மதிப்புரை . -
Read more
மடை திறந்து / Madai Thiranthu
₹220₹205பாடலின் கவிதை வரிகளை சிலாகித்து எழுதுபவர்கள் மீது , நாம் ரசித்தது போலவே ரசித்திருக்கிறாரே என்ற புள்ளியில் அவர்பால் மிகுந்த நட்பு பிறந்து விடுகிறது . அவருக்கும் நமக்கும் பெரிய தொடர்பு ஏதும் இருக்கப் போவதில்லை . பொதுவான அம்சமாக ரசனை மட்டுமே உண்டு . அது போதாதா நட்பு பூக்க … ? தம்பி இளம்பரிதி அத்தகையவர் . மொழிவளம் மிக்கவர் . பாடலின் வரிகளை சிலாகித்து எழுதுவதில் பெரும் ரசனைக்காரர் . அவரது இந்த ‘ மடை திறந்து ‘ தொகுப்பை ரசனைகளின் வாசல் என்றே சொல்லலாம் . இந்தத் தொகுப்பு உங்கள் கைகளில் மிதக்கிறது என்றால் சர்வ நிச்சயமாக நீங்கள் ரசனை மேவியவராகவே இருத்தல் வேண்டும் . ஏனெனில் ஒருபோலான மனங்களை ஒன்றிணைப்பதுதான் கலையின் வினை .– கவிஞர் யாத்திரி -
Add to cart
மதுரை மீனாச்சி / Madurai meenachi
₹150₹140மதுரை மீனாச்சியின் உண்மை வரலாறு என்பது , மதுரையில் உண்மையாகவே மீனாச்சி என்ற ஒரு அரசி ஆட்சிசெய்தாள் என்பது அல்ல . மதுரையின் நெடிய வரலாற்றில் , மீனாச்சி என்ற அரசி ஆட்சி செய்ததாக எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை . அப்படி ஒரு பெரிய அரசி யாரும் இல்லை . ஆனால் மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கடவுளாக வழிபடப்படும் மீனாச்சி என்ற கடவுள் எப்படி , படிப்படியாக உருவாகி , இன்று இருக்கும் கடவுளாக ஆனார் என்பதற்கு ஒரு நெடிய வரலாறு இருக்கிறது . இந்தக் கதையில் சொல்லப்படும் கதையும் உண்டு , சொல்லப்படாத கதையும் உண்டு . சொல்லப்படாத , மறக்கப்பட்ட உண்மை வரலாறும் உண்டு .
-
Add to cart
மற்றமையை உற்றமையாக்கிட / Mattamaiyai Uttamaiyaakida
₹160₹149முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை . ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை .குறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக் கூடியவை.இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க எலுமோ என வியப்பைத் தருவதாகவோ , இப்படி பார்ப்பதற்க்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச்செய்பவை .– முன்னுரையில் எழுத்தாளர்ஆதவன் தீட்சண்யா