அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களை போற்றத்தக்க உயிர்க்களையோடும் வலியோடும் சித்தரிக்கிறது இந்நூல் . உள்ளது உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரள் மக்களது உள்ளார்ந்த எண்ணங்களையும் மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சி அலைகளையும் இம்மியும் பிறழாது வியக்கத்தக்க நேர்மையுடன் பதிவு செய்துள்ளது இதன் சிறப்பம்சமாகும் .