Showing all 3 results
-
Read more
புது வீடு புது உலகம் / Pudhu Veedu Pudhu Ulagam
₹600₹558நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பு சக்தியான கு . அழகிரிசாமியின் ஒரு விஸ்தாரமான நாவல் , ‘ புது வீடு புது உலகம் ’ … சிறுகதைப் பரப்பில் மனித உறவுகளையும் மன உணர்வுகளையும் ஒரு குறிப்பிட்ட கால , இடச் சூழலின் பின்புலத்தில் அபாரமாகவும் நுட்பமாகவும் வசப்படுத்திய படைப்பு மேதை கு . அழகிரிசாமி .இந்நாவலில் கு . அழகிரிசாமி மிக விஸ்தாரமான தளத்தில் , தன் காலத்திய புது உலகின் விசித்திரக் கோலங்களை விரிந்து , பரந்த பின்புலங்களில் மனவெளிப் பயணமாகக் கைப்பற்றியிருக்கிறார் . காலத்தின் அசுர நிழல் கவிந்து , சிதைவுறும் மூன்று பெண்களின் உலகமிது . நாவல் தொடங்கும்போது , ஒளியும் இருளும் சரிநிகர் சமானமாகப் படரும் ஓர் உலகம் , நாவலின் வளர்ச்சியில் இருள் அடர்ந்த பிரதேசமாகிறது . புது உலகின் நிர்தாட்சண்யமற்ற கோர முகம் நம்மைப் பெரும் அதிர்வுகளுக்குள்ளாக்குகிறது .