Showing 1–16 of 17 results
-
Read more
100 சிறந்த சிறுகதைகள் / 100 Sirantha sirukathaikal
₹1,000₹930ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும் , கதைக்கருவிலும் , சொல்லும் முறையிலும் , மொழி நுட்பத்திலும் , கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது . இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன . இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள் .
-
Add to cart
அரூபத்தின் நடனம் / Arupathin Nadanam
₹350₹326காஸபிளங்கா படத்தை எப்போதும் பார்த்தாலும் . பழைய போட்டோ ஆல்பத்தைத் திரும்பப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் உருவாகிறது . சினிமா நமக்குள் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்களும் உணர்வுகளும் மறக்கமுடியாதவை .1930 களின் கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி மும்பை திரைப்படவிழாவில் திரையிட்ட ஈப் அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித் திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன .நிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்த உண்மையின் கவிஞன் எனத் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியோ டி சிகா . அது சிறந்த இயக்குநர்கள் அனைவருக்கும் பொதுவான வாசகமே . -
Add to cart
எனதருமை டால்ஸ்டாய் / Enatharumai Tolstoy
₹100₹93உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பதும் , அவற்றைப் பற்றிப் பேசுவதும் , எழுதுவதும் ஒரு அற்புதக்கலை . மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும் . தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங்களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் . க.நா.சு.வுக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக் களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார் . உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதியுள்ள இக்கட்டுரைகள் மகத்தான படைப்பாளியின் வாழ்வுபற்றியும் படைப்பின் உள்ளடுக்குகள் பற்றியும் ஒருசேர அறியத் தருகிறது என்பதே இந்த நூலின் புதுமையாகும் .
-
Add to cart
கதாவிலாசம் / Kathavilasam
₹380₹353தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘ கதாவிலாசம் ’ ” . தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை , தன் சொந்த அனுபவங் களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. தமிழ் சிறுகதையின் சாதனையாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம் . கதைகளின் வழியாக வாழ்க்கையின் விசித்திரங்களையும் , ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது .
-
Read more
குறத்தி முடுக்கின் கனவுகள் / Kurathi Mudukkin Kanavugal
₹160₹149புதுமைப்பித்தன் . சம்பத் , ஜி.நாகராஜன் . ஹெப்சிபா ஜேசுதாசன் , வண்ணதாசன் , வைக்கம் முகமது பஷீர் , சரத் சந்திரர் என நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் படைப்பின் நுட்பங்களையும் தனித்துவத்தையும் வெளிக் காட்டுகின்றன .புத்தக வாசிப்பு என்பது வெறும் நிகழ்வல்ல . மாறாக ஆழ்ந்து கற்றுக் கொள்ளும் தொடர் இயக்கம் என்பதை இந்தக் கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன .தீவிர வாசகன் தன்ன வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியப் படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது . -
Add to cart
செகாவ் வாழ்கிறார் / Chekov Vazhkirar
₹150₹140முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் . சாத்தியமில்லை . சமூகத் தடைகளும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும் சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டுதானிருப்பார்கள் , கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள் . சகமனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிறார் செகாவ் . ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் . ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் .
-
Add to cart
தேசாந்திரி / Desanthiri
₹275₹256மனிதர்கள் உலகத்தை அறிந்து கொள்ள பயணப்படுதல் அவசியமானது . இலக்கற்ற பயணியான எஸ்.ரா. தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார் . பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை , மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்
-
Add to cart
பின்கட்டு / Pinkattu
₹90₹84தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்ற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை … இக்கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றையச் சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை . பத்திரிகைகளின் பந்த நிர்பந்தங்களை மீறியும் , இலக்கிய பூர்வமாகவும் சிந்திக்கிற நான்கு பேர் தாங்களாகவே வெளியிட்டிருக்கிற சிறுகதைத் தொகுப்பு இது . தப்பித்தவறி ஒன்றிரண்டு பிரசுரிக்கப்படுகிற வாய்ப்பு உண்டு என்று யாரேனும் சொல்வீர்களேயானால் , அது பத்திரிகை ஆசிரியர்களும் சமயங்களில் அவர்கள் அகராதிப்படி நிதானம் இழக்கக்கூடும் என்பதைத்தான் நிரூபிக்குமே அன்றி அவர்களின் இலக்கியப் பிரக்ஞையை நிரூபிக்காது …மனித சமூகத்தில் அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள் , மதிப்பீடுகள் , அவ்வளவாக மாறவில்லை என்றே சொல்ல வேண்டும் .இக்குணாதிசயங்களை , மதிப்பீடுகளைப் புரிந்துகொள்கிற கலைஞன் , வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டவன் ஆகிறான் . அவனது சிருஷ்டிகள் உயிர்த்துடிப்பும் , அர்த்த புஷ்டியும் நிரம்பப்பெறுகின்றன . அவை சமகாலத்திற்கு மட்டுமல்லாமல் மனித பரம்பரைக்கே உரியனவாய் ஸ்தாபிதம் பெறுகின்றன .ஐராவதம் ஆர்.சுவாமிநாதன்‘ கோணல்கள் ’ தொகுப்பின்முன்னுரையில் ( 1968 ) -
Add to cart
ரயில் நிலையங்களின் தோழமை / Rail Nilaiyangalin Thozhamai
₹125₹116காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன . பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டிற்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன . உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல் . ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே .