Showing the single result
-
Add to cart
முற்றாத இரவொன்றில் / Muttratha Iravontril
₹140₹130ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாசயமாய் அச்சேற ஆரம்பித்துவிட்டன . பிரச்சனையின் ஆதிதொட்டு அகழ்வாராய்ச்சியில் இறங்கி அலங்கரிக்கின்றன . இங்கே சிறிய களம் , நாவலாய் விரிந்துள்ளது . கால் நூற்றாண்டுகால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன் . காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளும் எதோ ஒரு சிதைவில் சந்திக்கின்றன . சாதியம் எனும் மாபெரும் மாயப் பிசாசு ஒவ்வொரு மனிதனின் அணுவிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது . அந்த நிஜத்தை உணர்ந்தாக வேண்டி இருக்கிறது . அது ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரு பிளவுகளைக் கொண்டு ஜீவிக்கிறது அந்தப் பிரிவுகளில் உலகம் ஒடுங்குமானால் பிரச்சனைகள் கூர்மைப்படும் . ஆனால் அசாத்தியமான செல்வழியில் தான் வர்க்கங்கள் வாய் பிளந்து உறங்க வைக்கப்படுகின்றன . ஒரு நாள் இரவில் நடக்கிற சம்பவத்தைச் சொல்கிற போது வாழ்வின் மிச்சம் , தாழம்புதராக மணத்துக் காட்டுகிறது .– ம.காமுத்துரை