Showing all 9 results
-
Read more
அகம்,புறம்,அந்தப்புரம் / Agam,Puram,Anthappuram
₹1,666₹1,549இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது .மாட மாளிகை , கூட கோபுரம் , பளிங்குப் பிரதேசங்கள் , பரவச நந்தவனங்கள் , இந்தப் புறம் அந்தப்புரம் , எந்தப் புறமும் எழில் கன்னிகைகள் , சுகம் – சொகுசு உல்லாசம் நூறு சதவிகிதம் , எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம் . பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘ முந்தைய அத்தியாயம் ‘ ஒரு புதைபொருள் . அதுவே இந்தப் புத்தகம் .தன் ‘ வளர்ப்பு ‘ நாய்க்கு கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்த மகாராஜா முதல் மன்னர் மானியத்தையும் இழந்து மாதச்சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற ராஜா வரை – இந்தப் புத்தகம் விவரிக்கும் சரித்திரம் நீண்டது . நெடியது . ஹைதராபாத் , பரோடா . மைசூர் , ஜெய்ப்பூர் , காஷ்மீர் , புதுக்கோட்டை , பாட்டியாலா , நபா , கபுர்தலா , இந்தூர் , ஜோத்பூர் , தோல்பூர் , பரத்பூர் , அல்வார் , பஹவல்பூர் , ஜூனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளன .மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது . அதனால்தான் , யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல் , வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது .முகிலின் இந்தப் புத்தகம் , அரண்மனை வாயில் வழியே உங்களை அழைத்துச்சென்று , அந்தப்புரத்தின் பின்கதவு வரை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது . இந்திய சமஸ்தானங்கள் குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான , முக்கியமான பதிவு -
Read more
பயண சரித்திரம் / Payana Sariththiram
₹420₹391உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன .கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் , உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதி மனிதன் . கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நிகழ்ந்தன . கடலுக்குள்ளிருந்து ராட்சத விலங்கு திடீரெனத் தோன்றி கபளீகரம் செய்துவிடும் என்ற பயம் எப்போதும் மனிதனுக்கு இருந்தது . தயக்கத்தையும் பயத்தையும் மீறி , தேவைகளினால் புதிய எல்லைகளைத் தேடி அவனது பயணங்கள் விரிந்தபோது புவியியலின் ரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தன . பயணங்களே உலகின் வரைபடத்துக்கு உயிர் கொடுத்தன .பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடல் பயணங்களில் அசகாய சூரர்களாக விளங்கிய பாலிநேசியர்கள் , கிறித்துவுக்கு முந்தைய காலத்திலேயே கப்பல் கட்டுவதில் கணவான்களாகத் திகழ்ந்த பெனிஸீயர்கள் , சூரியன் உதிக்கும் இடத்தைக் கண்டறியக் கிளம்பிய அலெக்ஸாண்டர் , புத்தரின் தரிசனங்களைத் தேடி நிகழ்த்திய பயணங்களால் அழியாத சரித்திரத்தைப் பதிவு செய்த ஃபாஹியான் மற்றும் யுவான் சுவாங் , இரக்கமற்ற கொள்ளையர்கள் என்றாலும் பத்தாம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிச் சாதித்த வைகிங்குகள் , அன்றைய வெனிஸ் முதல் மயிலாப்பூர் வரை நமக்குக் காட்சிப்படுத்தும் மார்க்கோ போலோ , மெக்கா பயணத்துக்குக் கிளம்பி துக்ளக்கிடம் சிக்கி , தன் அனுபவங்களை திக் திக்கென விவரிக்கும் இபின் பதூதா , அதிகம் அறியப்படாத ஆச்சரியப் பயணி ஸெங் ஹே … இப்படி இந்தப் புத்தகம் பேசும் சுவாரசியப் பயணங்கள் ஏராளம் .இவை பயணிகளின் / பயணங்களின் குறிப்புகள் மட்டுமல்ல . அந்தந்த நூற்றாண்டுகளில் உலகின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் ஆவணமும்கூட . -
Read more
மாண்புமிகு விவசாயிகள் / Manbumigu Vivasayigal
₹177₹165உழவுத் தொழில் நொடிந்த நிலையில் , ஒரு பிரதேசமே கைவிடப்பட்ட சூழலில் , செயற்கையான உரங்களாலும் , பூச்சிக் கொல்லிகளாலும் மண்ணே மலடான தருணத்தில் – ஒரு மீட்பர் போல , ஒரு தேவதை போலத் தோன்றி , அந்தப் பிரதேசத்துக்கே புத்துயிர் கொடுத்த உழவர்களின் அசாதாரணக் கதைகளே இந்தப் புத்தகம் .இந்த மண் மீதும் , மனிதர்கள் மீதும் கொண்ட அக்கறையினால் இயற்கை விவசாயத்தை நம்பிக் களமிறங்கி , அவமானங்களைப் புறக்கணித்து , தோல்விகளை விழுங்கி நிமிர்ந்து , நின்று போராடி , பசுமையை மீட்டெடுத்து வென்ற எளிய , வலிய மனிதர்கள்தாம் இவர்கள் . தாம் இயங்கும் சமூகத்தையும் இயற்கை விவசாயத்தின் வழியில் கைதூக்கிவிட்ட வயக்காட்டுப் போராளிகள் . நம் மண்ணில் மட்டுமல்ல – தேசங்கள் தோறும் , கண்டங்கள் தோறும் அர்ப்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு இயற்கை விவசாயிகளை இங்கே சந்திக்கலாம் .இயற்கையோடு இணைந்த இவர்களது வெற்றி , பசுமையான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் மிச்சம் வைக்கிறது . நாளைக்கும் நம் சந்ததிக்கும் நல்ல , ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்ற ஆசையைத் தக்க வைக்கிறது . மாற்றம் , நம் மனத்தில் இருந்துதான் உண்டாக வேண்டும் என்ற பேருண்மையை உரக்கச் சொல்கிறது .இந்த மாண்புமிகு விவசாயிகள் நம் மனத்தில் உண்டாக்கப் போகும் மாற்றம் மகத்தானது ! -
Add to cart
முகலாயர்கள் / Mugalayargal
₹640₹595பாபர் , பானிபட் , அக்பர் , தின் இ – லாஹி , தெய்வீகக் தாஜ்மஹால் , காதல் , ஒளரங்கசீப் , தேஜ் பகதூர் , சிவாஜி , மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம் .உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம் . நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய ! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள் .பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரே பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது . ஆந்திர எல்லை வரை ஒளரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா ( அன்றைக்கு ஹிந்துஸ்தான் ) உருவாக இன்னும் நாளாகியிருக்கும் ! நமது இன்றைய மதச்சார்பின்மை , அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே .இன்னும் சொல்லலாம் . முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி , நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம் .இந்நூல் பேரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதுடன் நின்றுவிடவில்லை . ‘ இந்திய தேசியம் ‘ என்னும் கருத்தாக்கம் தோன்றி , வலுப்பெற்று , எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதை இதன் அடிநாதமாக இருப்பதே சிறப்பு .யூதர்கள் , செங்கிஸ்கான் வரிசையில் முகிலின் மற்றுமொரு வரலாற்று நூல் . முகலாயர்களின் எழுச்சி முதல் வீழ்ச்சி வரை முழுமையாக விவரிக்கும் முதல் தமிழ் புத்தகம் இதுவே . இந்திய சமஸ்தானங்கள் குறித்து முகில் எழுதிய அகம் , புறம் , அந்தப்புரம் வரலாற்றுத் தொடர் , குமுதம் ரிப்போர்ட்டரில் இரு ஆண்டுகள் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது .