Showing all 4 results

  • SAVE 7%

    ஒச்சை / Ochai

    180 167
    சொற்களில் அழகானவை , அசிங்கமானவை என்று பேதம் கொள்ள முடியுமா ? மக்களும் அவர்தம் நிலமும் கொண்டிருக்கிற தனித்துவம் அதில்தானே இருக்கிறது என்கிற மீரான் மைதீன் , எளியவர்களின் மொழியையும் , அதிகாரத்தின் மொழியையும் மறைப்பின்றி எழுதியிருக்கிறார் . இயற்கையின் பெருங்கருணையால் வசப்பட்ட வாழ்வு வன்மத்தின் பிடியில் சிக்கும்போது , கொலையும் பழியுமாக எவ்வாறு வதைபடுகிறது என்பதைச் சொல்கிறது ஒச்சை .
    பரிவும் தர்க்கமும் கொண்டு வாழ்வின் அநித்தியத்தை உணர்ந்தவனான கோயாவின் வாழ்வு சிதைபடுவதைச் சுற்றி விரிகிற கதைக்களம் , பாவம் ஒரு பக்கமும் பழி மறுபக்கமாய் வேறு வேறு திசைகளில் செல்லும் எளிய மனிதர்களின் வாழ்வை அவர்களுக்கேயான பாடுகளோடு விவரிக்கின்றது . சுற்றியுள்ள மனிதர்களின் நல்லதும் பொல்லாததுமான வார்த்தைகள் உருவாக்கிய சிறகு முளைத்த கதைகள் வெளியெங்கும் திரிய , வலியாற்றங்கரை மணலில் நாமும் கால் பதிய நடக்கிறோம் ; ஒவ்வொரு பாத்திரத்தையும் சந்தேகத்தோடு பின்தொடரச் செய்கிற மீரானின் மொழி , அதிகாரத்தின் கரங்கள் நிராதரவான மனித வாழ்வில் கடுமை கொள்ளும்போது , அந்த நெருக்கடியை , பயத்தை நம்மிடம் கடத்துகிறது . கேட்க நாதியற்றவர் வாழ்க்கை யாரும் சிதைத்திடக்கூடிய மணல் வீட்டைப் போன்று நிர்கதியாய் நிற்கின்றது எனச் சித்திரமாக்கும் அவர் , கண்ணீரையும் சாபத்தையும் தவிர அவர்களால் இயன்றது வேறென்ன ? மிச்சமிருப்பது ஒச்சைகள்தானே … என நம்மிடமே கொடுக்கிறார் திரை மூடும் கயிற்றை .
    – ந . கவிதா
    Read more
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 7%