Showing 17–32 of 50 results
-
Read more
குமரித்துறைவி / Kumarithuravi
₹195₹1811311 ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு . 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் . அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் . அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல் . ” இது ஒரு மங்கலப்படைப்பு , முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று ” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
-
Read more
தங்கப்புத்தகம் / Thangaputhagam
₹330₹307இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள் . திபெத் ஒரு தங்கப்புத்தகம் . வாசிக்க வாசிக்க விரிவது , வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது . மானுடத்திலிருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது . நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘ கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு . மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன . ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது . மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது . இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாகக் கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது . கனவில் எல்லாமே குறியீடுகள் . ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது . இது மெய்யான திபெத் அல்ல . இது நிக்கோலஸ் ரோரிச் தன் ஓவியங்களில் சித்தரித்த திபெத் . ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம் . அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண் . இந்தக்கதைகளில் ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது . ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது .
-
Add to cart
நத்தையின் பாதை / Nathaiyin Paathai
₹100₹93இலக்கியம் விந்தையானதொரு கலை . முதன்மையாக கலையென நிலைகொள்கிறது . எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை . ஆனால் இலக்கியமென்னும் அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட . ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது . ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது . பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில் , அரசியலில் பங்கெடுக்க முடிகிறது . கலை அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன . பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை , சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன . இலக்கியம் எழுதுவது , வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று . இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை