கார்ல் எழுத்துக்களின் மற்றுமொரு முக்கியமான பண்பு அவை ideological ( கருத்து நிலை ) சுமையற்றவை என்பது . அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை , அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார் .
பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார் . அவற்றை விமர்சிக்கிறார் . மறுக்கிறார் . அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘ சமூக ஊடகங்களின் மனசாட்சியாகவும் ‘ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார் .