உலகப்புகழ்பெற்ற நாவல்களையும் அதன் முக்கியத் துவத்தையும் அடையாளப்படுத்துகிறது இந்நூல் . நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கிய வடிவம் . உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள் . நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன . செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும் , எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .
இரவின் தாழ்வாரங்களில் நடந்து திரிந்து அதன்விசித்திரங்களை அறிந்த அப்துல்கரீமின் கதை புதினத்தின் முற்பகுதியைக் கட்டமைக்கிறது . இரவை சிருஷ்டிக்கும் சூட்சமம் விரல் வழியாக யாமம் என்னும் வாசனைத் திரவியம் ஆகிறது . யாமத்தின் பெரும் நிகழ்வுகள் , போராட்டங்கள் , துயரங்கள் , களியாட்டங்கள் எல்லாவற்றையும் ஊடறுத்துக் கொண்டு பண்டாரமும் நாயும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் . பண்டாரமும் நாயும் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக முதல் முதலாக ஒரு அசலான தமிழ்ப் பண்பாட்டுப் புனைவை புதினமொன்றில் படிக்கிறோம் .