மனிதன் , எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே , அவனிடமிருந்து அன்பு , பாசம் , பரிவு , நேசம் , பச்சாதாபம் , இணக்கம் , இயைவு , உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன . எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன் , அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொள்கிறான் . ஒரு எல்லை வரைவுக்குள் மட்டுமே அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பதைத் தெரிந்தும் , ஆபத்தான அதை விரிவுபடுத்த முனையும் அவன் பேராசை இலக்கற்றதாக இருக்கிறது . இதில் எந்தப்படிநிலையும் விலக்கல்ல . அதிகாரம் சுவைத்துப்பார்த்தவர்களுக்கு போதையானது . போதைக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள் ….