Showing all 4 results

  • SAVE 7%

    சமுத்திரன் எழுத்துகள் தொகுதி – 01

    300 279

    மக்கள், சமூகங்கள், ஒடுக்கப்படுபவர்கள். ஏழைகள், அகதிகள் என விரியும் இந்த பெரும் பரப்பில், இந்தப் பிரிவினர்களின் நலனை முன்னிருத்திய இத்தகைய பார்வைகள் மிக வலுவானவை மட்டுமல்ல, மனித குலத்தின் தார்மீகமான அடிப்படை அத்திவாரமுமாகும். இதனை இக்கட்டுரைகளின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் காணலாம்! கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக இலங்கை, இந்திய, புகலிட நாடுகளின் சமூகத்தளங்கள், இவற்றில் நிகழ்ந்த பல்வேறு அம்சங்கள் இத்தொகுதியின் பேசுபொருளாகும். வடிவம் சார்ந்து நாடகம், கூத்து, நாவல், கவிதை, நூலாய்வு எனவும், துறை சார்ந்து வரலாறு, கோட்பாடு. தேசியவாதம், இந்துத்துவா, தலித்தியம், புகலிட சமூகம், யாழ்ப்பாண சமூகம், மலையகத் தமிழ் சமூகம் எனும் பகுதிகளையும் இத்தொகுதி உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. புகலிட தமிழ் சமூக உருவாக்கம், புகலிட கலை இலக்கியம் என்பன, இன்று தன்னை நிலைப்படுத்தி அடுத்த கட்டத்திற்குள் நகர்ந்து வருகிறது. புகலிடத்தில் பிறந்து. வளர்ந்து, கல்விகற்ற பிரிவினர் உருவாகி விட்டனர். இந்த சமூக உருவாக்கத்தின் தொடக்கப் போக்குகள் பற்றிய தேடலிலும், ஆய்விலும் ஆர்வம் கொண்டோருக்கும் இத் தொகுதியின் உள்ளடக்கம் துலக்கமான புள்ளிகளைக் காட்டக்கூடியது.

    Read more
  • SAVE 7%

    சமுத்திரன் எழுத்துகள் தொகுதி – 02

    280 260

    இந்த நூலில் சர்வதேச அரசியல் பொருளாதாரம் தொடர்பான பதினொரு கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1994 இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையைத் தவிர மற்றவை எல்லாம் 2009 – 2020 காலத்தில் வெளிவந்தவை. நவதாராளவாதம் மற்றும் உலகமயமாக்கலின் பல்வேறு அம்சங்கள், முதலாளித்துவத்தின் எதிர்காலம், சுற்றுச் சூழல் நெருக்கடிகள் பற்றிய மாக்சிச செல்நெறிகள், கோவிட் பெருந்தொற்றின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள், 1917 ஒக்டோபர் புரட்சி, மற்றும் மாக்சிசத்தின் இன்றைய பயன்பாடு ஆகியன இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அலசப்படும் பிரதான விடயங்களாகும். இந்த நூலின் பல கட்டுரைகளின் பேசுபொருட்களில் நவதாராளவாதம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்த நூலை ஒரு கட்டுரைத் தொகுப்பாகப் பார்க்குமிடத்து அதன் பேசுபொருட்கள் பெரும்பாலும் கடந்த நான்கு தசாப்தங்களின் உலக அரசியல் போக்குகள் மற்றும் விவாதங்கள் தொடர்பானவை என்பது புலப்படும்.

    Read more
  • SAVE 7%

    சமுத்திரன் எழுத்துகள் தொகுதி – 04

    140 130

    இலங்கை அரசியல் அரங்கின் நடுத்தளத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு முக்கிய கருத்தமைவுச் சக்தியாக சிங்களப் பெருந்தேசிய இனவாதம் இயங்குகிறது. இன்றைய கருத்தமைவு வடிவத்தில் நாம் காணும் சிங்களப் பெருந்தேசிய இனவாதத்தின் ஆரம்பமும் விருத்தியும் பற்றிய கதை, இலங்கை வரலாற்றில் கடந்த நூற்றாண்டுக் காலத்துடன் பின்னிப்பிணைந்த கதையாகும்.
    தமிழீழ விடுதலைப் போராட்டம் இராணுவவாதத்திற்குப் பலியாகியது. குறுந்தேசியவாதம் இராணுவவாதத்தின் கருவியாகியது. தமிழ்த் தேசியவாதம் அதன் எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் பிரதிபிம்பம் போலானது.
    தேசிய இனப்பிரச்சனையின் ஜனநாயக் ரீதியான தீர்வுக்கான கொள்கை ஒன்றினைத் தெளிவாக வரையறுத்து, அதன் அடிப்படையிலான ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் நிலையில் ஒரு இடதுசாரி அமைப்பும் இருக்கவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் இனங்களின் சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்தது என்பதை மறந்துவிடலாகாது.

    Read more
  • SAVE 7%

    சமுத்திரன் எழுத்துகள் தொகுதி -03

    260 242