Showing 3169–3184 of 3255 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மன்னார் கண்ணீர்க் கடல் / Mannar Kanneer Kadal

    120 112

    மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது . பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெரும் முதலாளிகளிடம் சிக்கிக்கொண்டது . அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இந்த முதலாளிகளின் தரகர்களாய்க் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்ட பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன . நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழைப் பாரம்பரிய மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டடைவது எப்போது ?

  • Out Of Stock SAVE 8%
    Read more

    மரநாய் / Maranaay

    80 74
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மரபும் புதுமையும் / Marapum Putumaiyum

    110 102
  • SAVE 7%
    Add to cart

    மரப்பசு / Marappacu

    290 270
  • SAVE 7%
    Add to cart

    மரப்பல்லி / Marappalli

    150 140
  • SAVE 7%
    Add to cart

    மலர் மஞ்சம் / Malar Mancam

    690 642
    தி . ஜானகிராமனின் இரண்டாவது நாவல் ‘ மலர் மஞ்சம் ‘ . ‘ கிராம ஊழிய’னில் 1940 களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த ‘ அமிர்தம் ‘ போலவே இந்த நாவலும் ‘ சுதேசமித்திரன் ‘ வாரப்பதிப்பில் 1960 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது . நாவலாசிரியராக தி . ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பும் இதுவே . பாத்திரச் சித்திரிப்பு , பின்புலவலு , மொழிச் சரளம் , வாசிப்பின் உயிரோட்டம் ஆகிய கூறுகளால் தனித்துநின்ற , நிற்கும் படைப்பு . மானுட சேஷ்டைகளைக் கூர்ந்துநோக்கும் தி . ஜானகிராமனின் தீரா வியப்பும் ஆண் – பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய அவரது ஓயாத விசாரணையும் துலங்கும் நாவல் இது . பலதார மணம் , மரபை மீறிய காதல் என்று எழுதப்பட்ட கால அளவில் பேசப்பட்ட நாவல் இன்றைய வாசிப்பில் புதிய காலத்தின் கேள்விகளையும் முன்வைக்கிறது . நான்கு மனைவியரை மணந்துகொள்ளும் ஆண் அந்த உறவுகளின் சுமை தாளாமல் ஆன்மீகத்தில் அடைக்கலம் தேடுவது ஓர் இழை . அந்த உறவில் பிறந்த பெண் தனது உரிமையை மௌனமாக நிலைநாட்டுவது இன்னொரு இழை . இந்த இரு இழைகளிலிருந்து விரியும் கதை , பாலி என்ற பாத்திரத்தால் சமகாலத் தன்மை பெறுகிறது . தனது பிறப்புக்கு முன்பே குடும்பம் பேசிவைத்த ஆண் துணையை ஏற்பதா அல்லது தனது மனம் விரும்பும் துணையை வரித்துக்கொள்வதா என்ற பாலியின் தடுமாற்றமும் தேர்வுமே கதையை இன்றைக்கும் பொருந்தும் ஒன்றாக ஆக்குகிறது . ஒருவகையில் பாலி , அவளுடைய காலத்தை மீறியவள் . தனக்குத் தளை பூட்டிய மரபுகளை உடைத்தவள் . பாலியே தி . ஜானகிராமனின் பிற்காலப் பெண் பாத்திரங்களின் மூலப் பிரதிமை .
    சுகுமாரன்
  • SAVE 7%
    Add to cart

    மழையா பெய்கிறது? / Mazhaya Peigirathu?

    280 260
  • SAVE 7%
    Add to cart

    மாக்பெத் / Macbeth

    350 326
    ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும் , ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும் , இதற்கு முன்பே ஹாம்லெட் , லியர் அரசன் என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும் , தமிழை இயல்பாக , லாவகமாக , உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள் . இவற்றை ஆட்சியோடு கையாளுவதால் , மாக்பெத் என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக , ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது .
    ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள் , இடர்பாடுகள் , இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார் . அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம் ; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம் ; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம் ; அதன் பெருமையை , அதன் சிறுமையைக் காண்கிறோம் . பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம் . இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு , கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம் . இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர் .
    பேராசிரியர் அ . சீநிவாசராகவன்
  • SAVE 7%
    Add to cart

    மாதொருபாகன் / Maatorupaakan

    250 233
  • SAVE 7%
    Add to cart

    மாயப்படகு / Mayappadagu

    60 56
  • SAVE 7%
    Add to cart

    மாயமான் / Maayamaan

    250 233
    கி . ராஜநாராயணன் , ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் . ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர் . இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம் . வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை .
    – சுந்தர ராமசாமி
    கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி . ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல் .
  • SAVE 7%
    Add to cart

    மாயம்/ Maayam

    200 186