Showing 1–16 of 50 results
-
Add to cart
அந்திராகம் / Andhiragam
₹150₹140நோபல் பரிசு பெற்ற மூன்று எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகிறார்கள் . இஷிகுரோவின் நாயகன் ஓர் உதாரண மேட்டுக்குடி ஆங்கிலேயன் . உலகின் எல்லாவிதமான உணவுகளையும் ருசித்துப் பார்க்கவேண்டும் என்ற அவனது தேடல் வெறி ஒரு பிசாசைப் பிடித்து சமைத்து சாப்பிடும் அளவுக்குச் செல்லும் போது யார் மனிதன் யார் பிசாசு என்ற பேதம் மறைந்து விடுகிறது . குந்தர் கிராஸின் ஒப்புதல் வாக்குமூலமும் மார்க்கேஸ் விவரிக்கும் அவருடைய பெற்றோர்களின் போராட்டக் காதல் கதையும் இம்மகத்தான கலைஞர்களின் மந்திர எழுத்துக்குச் சான்றுகள் .
-
Read more
அறக்கயிறு / Arakkayiru
₹150₹140அறக்கயிறு ‘ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங் குகிறது . மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த , படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது . ‘ எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் ‘ விவேகானந்தரின் விவேக வாசகம் . இது தலைக்காவிரியென்றால் ஜெயமோகனின் ‘ இன்றைய காந்தி ‘ இதன் அகண்ட காவிரி .பேரா . சாலமன் பாப்பையா -
Add to cart
அழியாத கோலங்கள் / Azhiyatha Kolangal
₹400₹372வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர் . சத்தமில்லாமல் , அதிராமல் , நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது . நான் இப்படித்தான் இருப்பேன் , அது மாறாது . புலியின் மேல் வரிகள் என்னுடையது , அது மரணித்தாலும் போகாது என்று பேசும் அவர் கடைசி மூச்சு வரை அப்படியே வாழ இந்த பிரபஞ்ச சக்தி அவரை அனுமதித்தது .
-
Add to cart
இறுதி யாத்திரை / Iruthi Yathirai
₹150₹140வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் . அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது . புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை . மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது . எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது . அதன் அப்பழுக்கற்ற , பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . காலம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம்.டி.வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார் . ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன ?
-
Add to cart
உஷ்ணராசி / Ushnaraasi
₹750₹698இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட , அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம் , நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது . நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது . நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல் .அடூர் கோபாலகிருஷ்ணன்ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த போராட்ட நாட்களை விவரிக்கும் நாவல் . ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை . இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம் . -
Add to cart
கதை கேட்கும் சுவர்கள் / Kathi Katkum Suvargal
₹350₹326வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது ? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை , சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது . தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது .உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அலைக்கழித்தது .இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென , நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய்ப் பூத்து நிற்கிறாள் . அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது . -
Read more
கனவுகள் ஓடும் நாளங்கள் / Kanavugal Odum Nalangal
₹140₹130ஒவ்வொரு படைப்பாளிக்கும் அகம் உணரும் தருணம்தான் படைப்பின் உச்சம் , வாழ்வின் உச்சமும் கூட . தன்னை மட்டுமல்லாமல் மறு இதயங்களின் வலியையும் மென் உணர்வுகளையும் உணரும்போது ஒரு சாமானியன் படைப்பாளியாகிறான் ஜானு பல கவிதைகளில் அப்படியான நொடிகளை தாண்டிச் செல்கிறார் . இடறி விழுந்த பறவையின் காயத்தை மயிலிறகென வருடித் தேற்ற பறவையின் பாஷை தெரிந்திருக்க வேண்டியதில்லை , வலி உணரும் மனம் போதும் என்று நம்மை உணர வைக்கும் ஜானுவின் எழுத்துக்கள் பெண்ணியக்குரலின் வறட்சியற்று அதே சமயம் தன் நிலைபாட்டை உறுதியாய் பதிவு செய்கிறது . உங்கள் தேவதைப் பட்டங்கள் எனக்கு வேண்டாம் , என் சிறகுகளே போதும் என்று நம்பிக்கையும் தெளிவும் துளிர்க்க பேசுகிறார் . ஜானு , நிச்சயமாக இனி வரும் நாட்களில் உங்களின் அதி தீவிரமான கவிதைகளை நீங்கள் பதிவு செய்யக்கூடும் . அதற்கான எல்லா துளிர்களும் உங்களின் மரத்தில் துளிர்க்கத் தொடங்கிவிட்டன . இனி வருவது வசந்த காலமே . அதன் வழி வீசும் குளிர்க் காற்றை சுவாசிக்க நானும் காத்திருக்கிறேன் .