Showing 1–16 of 205 results
-
Read more
அஞ்சிறைத்தும்பி / Anchiraithumbi
₹400₹372ஆனந்த விகடன் இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு . வெளிவந்த காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை . குறிப்பாக கால இயந்திரத்தில் பெரியாரை அழைத்துவந்து சமகாலச் சூழலில் நிகழ்த்தும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ‘ ஜீன்ஸ் பெரியார் ‘ கதை , மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன் உரையாடல்களையும் தொடக்கிவைத்தது . புத்தர் , பெரியார் , அம்பேத்கர் , கார்ல் மார்க்ஸ் , காந்தி போன்ற வரலாற்று மனிதர்களில் இருந்து இளையராஜா , தனுஷ் என சமகால ஆளுமைகள் வரை கதைமாந்தர்களாகக் கொண்டவை இந்தக் கதைகள் . எதார்த்தவாதம் , மீ புனைவு , அ – நேர்கோட்டுக் கதைசொல்லல் , அறிவியல் புனைவு என பல்வேறு வடிவங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் , வாழ்க்கை குறித்த புதிய பார்வைகளை முன்வைப்பவை .
-
Add to cart
அடையாள மீட்பு / Adaiyala Meetpu
₹180₹167தேசிய , சனநாயக , மனித குல விடுதலை இதன் மையம் . எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல் , ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடனான , புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும் . மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது ; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது . அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி . போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது . போராட்டமே நம்மை உருவாக்குகிறது . போராட்டத்தில் தான் நமது வரலாறு , மொழி , இருப்பு தங்கியுள்ளது . அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும் ; எது செய்தாலும் இருக்கும் . அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம் : நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல : உலகை மாற்றக் கனவு காண்பவர்கள் .
-
Add to cart
அரசியல் சிந்தனையாளர் புத்தர் / Arasiyal Sinthannaiyalar Buddhar
₹350₹326பௌத்தம் ஒரு மதமல்ல , ஓர் அரசியல் சிந்தனை . புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர் ; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார் ‘–காஞ்ச அய்லய்யாஇன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன ; அவற்றைப் பின்பற்றவும் செய்தன . இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன ; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும் , தீர்மானங்கள் குறித்தும் , குறைவெண் வரம்பு , கொறடா , வாக்குகள் எண்ணுதல் , வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல் , ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல் , ஒழுங்குமுறைப்படுத்துதல் , தீர்ப்பு வழங்குதல் போன்ற அனைத்திற்கும் விதிகள் இருந்தன . எனினும் , ஒருவரது பொருளாதார , சமுதாய , அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது . ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார் . சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார் ‘-அம்பேத்கர் , அரசியல் நிர்ணய சபை உரையில் , -
Read more
ஆடு ஜீவிதம் / Aadu Jeevitham
₹250₹233நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைபார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான் . இரக்கமற்ற , அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது . தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது . முடிவில் , பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார் .மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல் . மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின் , நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகவும் மென்மையாகவும் கூறி , தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார் .2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல் -
Add to cart
கதையும் புனைவும் / Kathaiyum Punaivum
₹250₹233புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களைப் பேசுகிறது . வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது . முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகப் புதிய கோட்பாட்டுப் பார்வைகள் வற்புறுத்திவரும் பிரதி வாசிப்பு முறைகளை அவை இதுகாறும் புரிந்துகொள்ளப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்ட விதத்தில் அல்லது சற்றே முன்னேற்றப்பட்ட விதத்தில் சொல்லிப்பார்க்கிறது . குறிப்பிடத்தக்க முக்கியமான புனைவுகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் ஆசிரியரின் விரிவான புனைவாக்க அனுபவம் இதற்கான அடிப்படைத் தகுதி ஆகிறது .
-
Add to cart
காஃப்கா கடற்கரையில் / Kafka Kadarkarayil
₹900₹837தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான் . அவன் அப்பாவின் சாபம் ஒரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது . முதியவர் நகாடா , தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர் . சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை . எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது . இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க , பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன . வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன . ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள் . இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள் . குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது . ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை . இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன .
-
Read more
சாத்தானை முத்தமிடும் கடவுள் / Saathanai Muththamidum Kadavul
₹180₹167கார்ல் எழுத்துக்களின் மற்றுமொரு முக்கியமான பண்பு அவை ideological ( கருத்து நிலை ) சுமையற்றவை என்பது . அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை , அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார் .பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார் . அவற்றை விமர்சிக்கிறார் . மறுக்கிறார் . அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘ சமூக ஊடகங்களின் மனசாட்சியாகவும் ‘ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார் .– அ.மார்க்ஸ் -
Read more
சிறுவர்களுக்கான தத்துவம் /Siruvarkalukkana Thathuvam
₹300₹279இந்தப் புத்தகம் , இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல . இந்தப் புத்தகம் , நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது . நீங்கள் எழுதும் போது , சிந்திக்கும் போது , மொழியைப் பயன்படுத்தும்போது , ஒரு படத்தை வரையும் போது , நல்ல மனிதராக படிக்கும் போது , இருக்கும் போது அல்லது எதையோ கற்றுக்கொள்ளும் போது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப் புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும் .இயற்பியலும் தத்துவமும் பயின்ற பேராசிரியர் சுந்தர் சருக்கை , மாணவர்களிடம் தத்துவத்தைக் கொண்டுசெல்வதைத் தனது பொருட்டு இவர் தொடங்கிய கலையாய கடமையாகக் கருதுகிறார் . தத்துவத்தை விவாதிக்கும் ‘ பேர்ஃபூட் ஃபிலாஸபர்ஸ் ‘ அமைப்பின் வழியாக , சிறுவர்களுக்கெனப் பல தத்துவப் பயிலரங்குகளை நடத்திவருகிறார் . இதன் தொடர்ச்சியே ‘ சிறுவர்களுக்கான தத்துவம். -
Add to cart
ஜாதியற்றவளின் குரல் / Jaathiyatravalin Kural
₹450₹419ஜாதி ஒழிப்பு சார்ந்த கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கி 20 ஆண்டுகளாகின்றன . இந்நூலில் உள்ள கட்டுரைகள் 2001-2010 வரை எழுதப்பட்டவை . ஆனால் , அதன்பின்னர் நான் எழுதிய எல்லாமே திரும்பச் செய்தல்தான் ; நபர்களும் ஊர்களும் மட்டுமே மாறியிருக்கும் . ஆனால் , சாதி நிலையானதாக அப்படியே இருப்பதை சாதி ஒழிப்பிற்காகப் போராடிய , போராடும் பலரையும் போல நானும் வெறுப்போடு பார்க்கிறேன் . எந்த அரசியல் , சமூகப் போராட்டங்களாலும் சாதியை அசைத்துப் பார்க்க முடியவில்லை . பேரிடர் தாக்கினால் பேரிடரிலும் சாதிவெறி என எழுத நேர்ந்தது .இதோ தற்போது கொரோனாவிற்காக ஊரடங்கு போடப்பட்டது . ஊரடங்கிலும் சாதிவெறி என எழுத நேர்ந்தது .மீண்டும் மீண்டும் வன்கொடுமைகள் , தீண்டாமைகள் , புறக்கணிப்புகள் , அந்தத் துறையில் ஒடுக்குமுறை , இந்தத் துறையில் பாகுபாடு என எழுதிக் கொண்டே இருப்பதற்கு முடிவே வரவில்லை . ஓர் அநீதியை எதிர்த்துப் போராடுவது எதற்காக ? அந்த அநீதி ஒரு சில தலைமுறைகளிலாவது ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் . ஆனால் , சாதிக்கு மட்டும் அத்தகைய நிலையை நாம் ஏன் உருவாக்கவில்லை ? பிரச்சனைகளை பேசிக் கொண்டே இருப்பது தீர்விற்கு வழி வகுக்காது ; தீர்வைப் பற்றி பேசுவது மட்டுமே பிரச்சனையை ஒழிக்கும் என்பது அண்மையில்தான் எனக்கு விளங்கத் தொடங்கியிருக்கிறது . எனது அனுபவத்தில் விளைந்த மனப்பக்குவமாக இதை எடுத்துக் கொள்கிறேன் . -
Add to cart
தலித் இலக்கிய வரலாறு / Dalit Ilakiya Varalaru
₹350₹326தலித் இலக்கிய வரலாறு ‘ மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது . அள்ளிப் பருக முடியாத ஆவணங்களையும் வரலாறுகளையும்கலை இலக்கியப் பிரதிகளையும் இன்னும் எவ்வளவு காலம் சீர்படுத்தி வகுத்துத் தொகுப்பது என்ற மலைப்பிலும் இருப்பதை முறைப்படுத்தி நூலாக வருகிறது . இதனுடைய இரண்டாம் பாகம்வெளிவரும்போது மட்டுமே ஆசிரியரின் உழைப்பு எதை நோக்கியது என்பதைத் தீர்மானமாக வரையறுக்க இயலும் . தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலான பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது . படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது . இதனை இந்நூல் உங்களுக்குப் புரிய வைத்திடுமாயின் அதுவே இந்நூலின் வெற்றி .