Showing all 10 results
-
Add to cart
கானகத்தின் குரல் / Kaanakathin kural
₹125₹116கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி . நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது . வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது .ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958 ல் பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியானது .பக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான புத்தகம் . அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன் . இந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது .ரஷ்ய மக்களால் விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில அமெரிக்கப் படைப்பாளர்களில் ஜாக் லண்டன் முக்கியமானவர் . -
Read more
சித்தார்த்தன் / Siddharthan
₹130₹121கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே . பவுத்தம் , தாவோயிஸம் , கிறித்தவம் , இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும் , இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது .வாழ்க்கையின் உண்மை , அடையாளத்தைத் தேடும் அகப்பயணமாக இந்த நாவல் இருக்கிறது . தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக முதன்மைக் கதாபாத்திரமான சித்தார்த்தனின் வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின் பாதையை ஹெர்மன் ஹெஸ்ஸே விளக்கி யிருக்கிறார் .ஜெர்மானிய மொழியில் 1922 ம் ஆண்டு வெளியான இந்த நாவல் , 1951 ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான் , உலகம் முழுவதும் பிரபலமானது . 1972 ல் கான்ராட் ரூக்ஸ் ஆங்கிலத்தில் Siddhartha என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார் -
Add to cart
சூதாடி / Suthadi
₹230₹214மிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின் , இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வரமாட்டார்கள் . ஏற்கனவே எனக்குத் தெரியாத எந்தப் புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன் . இங்குள்ள விவகாரம்தான் என்ன ? விவகாரம் இதுதான் : சக்கரத்தின் ஒரேயொரு சுற்றால் யாவும் தலைகீழாய் மாறிவிடும் ; எனக்கு இப்பொழுது புத்திமதி கூற வருகிறார்களே இதே ஆட்கள் அப்பொழுது எல்லோருக்கும் முதலாய் ( இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை ) என்னிடம் ஓடிவந்து சிரித்து மகிழ்ந்து பேசுவார்கள் , வாழ்த்துரைப்பார்கள் . இப்பொழுது செய்கிறார்களே அதுபோல அப்பொழுது யாரும் என்னைப் பார்த்ததும் தூர விலகிச் செல்லமாட்டார்கள் . இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதுகிறவனல்ல நான் ! இப்பொழுது நான் யார் ? ஒரு பூஜ்யம் ! நாளைக்கு நான் எப்படிப்பட்டவனாக முடியும் ? நாளைக்கு நான் மாஜி மனிதன் என்னும் நிலை யிலிருந்து மீண்டெழுந்து வந்து திரும்பவும் வாழத் தொடங்கமுடியும் . என் நெஞ்சி ல் உறையும் மனித ஆன்மா இன்னும் அறவே அழிந்துவிடவில்லை எனில் நாளைக்கு நான் அந்த ஆன்மாவைத் தட்டியெழுப்பிச் செயல்பட வைக்கமுடியும் .( நூலிலிருந்து … )இந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும் . அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும் -
Read more
பாரபாஸ் / Parapaas
₹135₹126ஆனால் , அவர்களுடைய சகோதர கோஷ்டிகளோ … நேச விருந்துகளோ … ஒருவரை ஒருவர் நேசியுங்களோ … அவனுக்குப் பிடிக்கவே இல்லை . அவன் அவன் தான் , தனி ஒரு மனிதன் . சிலுவையில் அறையப்பட்ட கடவுளின் மகனான அந்த மனிதர்கூட அவனைத் தனி மனிதனாகத்தான் அங்கீகரித்திருக்க வேண்டும் . அவன் தன் தனிமையை மறக்கவேயில்லை . அவர் சிஷ்யர்களைப் போல அவன் அவருக்கு அடிமைப்பட்டவனல்ல ; அவருக்காகப் பாடிக்கொண்டோ பிரார்த்தனை செய்து கொண்டோ பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவன் அல்ல . அவன் பாரபாஸ் .
-
Add to cart
வாஷிங்டனில் திருமணம் / Washingtonil Thirumanam
₹130₹121பத்திரிகையுலகப் பிதாமகர் என்று விஸ்வநாதன் அழைக்கப்படும் சா . ( சாவி ) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது . இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது . சென்னை 1995 ல் தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது .