மந்தணம் பொதிந்து கிடக்கும் கடலைப் போலவே , கடலோடிகளைப் புரிந்து கொள்வதும் சிக்கலானது . கடலோடி கடலின் வார்ப்பாகவே உருவாகிறான் . கடலும் கடற்கரையும் அவர்களுக்கு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது . காலம் அவர்களின் மரபறிவை , இனக்குழு மொழியை , பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிறது . கடல்சார் மக்களின் இருத்தலை , செழுமையான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டாடுகின்றன ‘ கடல் சொன்ன கதைகள் ‘